ஜெயம் ரவி மாமியாரால் பிபி டேப்ளட் போடும் தயாரிப்பாளர்... அட அது அந்தப் படமா?

ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் 17 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு 2 அழகான மகன்கள் உள்ளனர். ஆனால் இப்போ இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இதற்குக் காரணம் ஜெயம் ரவி கெனிஷாவுடன் சுற்றியதுதான் என்கிறார்கள். ஆனால் ஜெயம் ரவியின் மன உளைச்சல். எல்லாவற்றையும் ஆர்த்தியும், அவரது அம்மா சுஜாதா விஜகுமாரும் கன்ட்ரோலில் வைத்துள்ளனர்.
ஜெயம் ரவியின் வங்கிக் கணக்கு, சினிமா கால்ஷீட், சம்பளம் என எல்லாவற்றையும் அவர்கள்தான் பார்க்கிறார்கள். ஜெயம் ரவியால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கு தீராத மன உளைச்சல் ஏற்படும்போது அவர் ஆர்த்தியை பிரிய நினைத்து விவாகரத்து கோருகிறார். அதன்பிறகு கெனிஷா தான் தனது வருங்கால துணைவி என அறிக்கை வெளியிடுகிறார்.
ஆர்த்தி மீண்டும் அறிக்கை வெளியிடுகிறார். இவர்களது விவாகரத்துக்கு 3வது நபர் தான் காரணம் என்கிறார்கள். அவர் கெனிஷா என்று சொல்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த 3வது நபர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் என்கிறார். இவர் சொன்ன வேறு பல தகவல்களைப் பார்ப்போம்.
அடங்க மறு படத்தின் தயாரிப்பாளர் பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்தி தான். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவியுடன் சேர்ந்து போய் தயாரிப்பாளரிடம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என சொல்கிறார். அதற்கு அவரும் ஒத்துக்கொள்கிறார்.
ஆனால் ஒரு காலகட்டத்தில் உள்ளே புகுந்து சந்திரமுகியாக மாறி அந்தப் படத்தின் தயாரிப்பாளராகிறார் சுஜாதா விஜயகுமார். இதுல என்ன சோதனை என்றால் பிக் பிரின்ட் கார்த்தி இதனால பெரிய மன அழுத்தத்துக்கு ஆளாகி வேதனையில் பிபி டேப்ளட் போட்டாராம்.
அப்புறம் ஜெயம் ரவியே அவரிடம் தப்பு நடந்து போச்சு. நான் உங்க பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்னு ஆறுதல் சொன்னாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அடங்க மறு லாபத்தைத் தந்த படம். ஆனால் ஜெயம் ரவியின் மாமியார் அது தோல்வி என சொல்லி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.