புஷ்பா 2 பட ஹீரோ அல்லு அர்ஜூன் கைது!.. பெண் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் அதிரடி...
Allu arjun: தெலுங்கு படத்தில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவரின் அப்பா தயாரிப்பாளர் என்பதால் சுலபமாக சினிமாவுக்குவந்தார். கடந்த 20 வாருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமுண்டு. காதல் கலந்த ஆக்ஷன் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் இவர்.
இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படம் சூப்பர் ஹிட் அடித்த்தால் அதன்பின் புஷ்பா 2 படமும் உருவானது. கடந்த 5ம் தேதி புஷ்பா 2 திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 1000 கோடி வசூலை தாண்டிவிட்டது.
இந்த நிலையில்தான் அல்லு அர்ஜூன் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். புஷ்பா 2 படம் வெளியானபோது ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை சிறப்பு காட்சி வெளியானபோது அல்லு அர்ஜுனும் அங்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தார். அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் மரணமடைந்தார். அதோடு, அவரின் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகத்தின் மீதும், அல்லு அர்ஜூன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், அந்த சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை என சொல்லியும், தன் மீது போலீசார் பதிந்த எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு அளித்திருந்தார். ஒருபக்கம், இறந்து போன ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவியும் அளித்திருந்தார்.
இந்நிலையில்தான், போலீசார் அல்லு அர்ஜூனை கைது செய்துள்ளனர். முன்னறிவிப்பின்றி அவர் தியேட்டருக்கு போனதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதே போலீசாரின் வாதமாக இருக்கிறது. அல்லு அர்ஜூன் விரைவில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டிருப்பது அவரின் ரசிகர்களிடையேயும், தெலுங்கு சினிமா உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கைது செய்யப்பட்ட வீடியோ: