ஷாருக்கானையே காலி செய்த அல்லு அர்ஜூன்!. ஹிந்தியிலும் கொடிநாட்டிய புஷ்பா 2...

by Murugan |
ஷாருக்கானையே காலி செய்த அல்லு அர்ஜூன்!. ஹிந்தியிலும் கொடிநாட்டிய புஷ்பா 2...
X

Pushpa 2: தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். புஷ்பா திரைப்படம் மூலம் பேன் இண்டியா நடிகராக மாறினார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே இரண்டாம் பாகத்தை மிகவும் அதிக செலவு செய்து உருவாக்கினார்கள்.

முதல் பாகத்தின் இறுதியில் போலீஸ் அதிகாரியாக வந்த பஹத் பாசிலுக்கு இரண்டாம் பாகத்தில் நிறைய காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், அண்ணனின் பெண்ணை காப்பாற்றுவது, மனைவி ஆசைப்பட்டதற்காக முதலமைச்சரையே மாற்றுவது என மாஸான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதோடு அசத்தலான சண்டை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.


பாகுபலி பார்த்த ரசிகர்கள் பாகுபலி 2-வுக்கு கொடுத்த அதிக வரவேற்பு போல, கேஜிஎப் 2-வுக்கு கொடுத்த வரவேற்பு போல புஷ்பா 2-வுக்கும் மாஸான வரவேற்பு கொடுத்தார்கள். எனவே, முதல் 2 நாட்களிலேயே இப்படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.

அதன்பின் தொடர்ந்து நூறு கோடி சேர்ந்து கொண்டே போனது. படம் வெளியாகி 10 நாட்களில் இப்படம் ஆயிரம் கோடியை எட்டியது. அப்போதுதான் சிறப்பு காட்சியில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தால் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.


இது படத்திற்கு பெரிய புரமோஷனாக மாறிப்போனது. எனவே, 3 நாட்கள் 500 கோடி வசூல் செய்தது. அதாவது படம் வெளியாகி 13 நாட்களில் புஷ்பா 2 படம் 1500 கோடியை தாண்டியது. தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் புஷ்பா 2 படம் மாஸ் காட்டி வருகிறது.

ஹிந்தியில் 13 நாட்களில் 600 கோடியை இப்படம் வசூல் செய்திருக்கிறது. இதுவரை எந்த ஹிந்தி படமும் இவ்வளவு குறைவான நாட்களில் இவ்வளவு வசூலை செய்தது இல்லை. பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கானின் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டியது. ஆனால், அந்த படம் 13 நாட்களில் 507.88 கோடியை வசூல் செய்திருந்தது. ஆனால், புஷ்பா 2 அதை விட அதிகமாகவே வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. மொத்தத்தில் புஷ்பா 2 மூலம் ஹிந்தியிலும் மாஸ் காட்டியிருக்கிறார் அல்லு அர்ஜூன்.

Next Story