இந்திய சினிமாவில் புதிய ரெக்கார்டை உருவாக்கிய புஷ்பா 2... 14 நாளின் மொத்த வசூல்..!

by Ramya |
pushpa 2
X

pushpa 2

புஷ்பா 2: இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பகுதிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது.


முதல் பாகமே 1000 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாத அளவிற்கு படத்தை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கின்றார் இயக்குனர் சுகுமார். மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.

மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக இருந்தது. படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வந்த காரணத்தால் வசூலில் ஏகபோக வரவேற்பு பெற்று வருகின்றது. தெலுங்கு மொழியை தாண்டி ஹிந்தி மொழியில் இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகின்றது.

படத்தின் பிரச்சனை: படம் வெளியான முதல் நாளே பெண்மணி ஒருவர் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து அவரது எட்டு வயது மகன் மூளைச்சாவு அடைந்தது. அதுமட்டுமில்லாமல் முன்னறிவிப்பு இல்லாமல் நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்த காரணத்தால் அவரை ஹைதராபாத் போலீஸ் கைது செய்தது என்று பல பிரச்சினைகள் எழுந்து வந்த நிலையிலும் படத்தின் வசூல் குறைந்தபாடில்லை. தொடர்ந்து படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.

புஷ்பா 2 வசூல் விவரம்:

புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி அடுத்தடுத்து சாதனைகளை செய்து வருகின்றது. அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 294 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். இரண்டாவது நாளில் 449 கோடியும், மூன்றாவது நாளில் 621 கோடியும், நான்காவது நாளில் 829 கோடியும், ஐந்தாவது நாளில் 922 கோடியும், ஆறாவது நாளில் 1002 கோடியும் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினராக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

அதைத் தொடர்ந்து 11வது நாளில் 1409 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தார்கள். நேற்றுடன் இந்த திரைப்படம் ரிலீஸ்-ஆகி இரண்டு வாரங்களை நிறைவு செய்திருக்கின்றது. அதன்படி 14 நாட்களில் படம் மொத்தம் 1508 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தற்போது அறிவித்திருக்கிறார்கள். மேலும் ஹிந்தியில் மட்டும் இந்த திரைப்படம் 14 நாட்களில் 620 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். ஹிந்தியில் பிறமொழி படம் இத்தனை கோடி ரூபாயை வசூல் செய்தது இதுவே முதல் முறையாகும்.

புதிய சாதனை: புஷ்பா 2 திரைப்படம் வெளியான நாள் முதலே அனைத்து திரைப்படங்களின் ரெக்கார்டையும் பிரேக் செய்து வருகின்றது. தொடர்ந்து பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் போன்ற படங்களின் அனைத்து வசூல் சாதனையும் முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறி வருகின்றது. அந்த வகையில் 14 நாட்களில் 1508 கோடி வசூல் என்பது இந்திய சினிமாவில் புதிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.


இந்த திரைப்படம் ஒரு புது பெஞ்ச் மார்க்கை இந்தியன் சினிமாவில் உருவாக்கி வைத்திருக்கின்றது புஷ்பா 2 திரைப்படம். வரும் நாட்களில் மேலும் இந்த திரைப்படம் மேலும் வசூல் சாதனை செய்யும் எனவும் நிச்சயம் 2000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் என்று கூறி வருகிறார்கள்.

Next Story