இது புது ரெக்கார்டாலா இருக்கு? மாஸ் காட்டும் அல்லு அர்ஜூன்.. புதிய சாதனை படைத்த புஷ்பா 2

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:32  )

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அமரன். சமீப காலமாக பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கிறது. வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு அமரன் திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் மற்றுமொரு திரைப்படம் புஷ்பா 2. ஏற்கனவே அதன் முதல் பாகம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் உருவானது. முதல் பாகத்தை இயக்கிய சுகுமார்தான் அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அதாவது மனைவியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் கடைசி சில நிமிட காட்சிகளில் மட்டும் வந்து மிரட்டிய பகத் பாசில் இதன் இரண்டாம் பாகம் முழுவதுமாக ஆக்கிரமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் இந்த படத்தின் மீது பெருமளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுவும் சமீப காலமாக தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதற்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்த திரைப்படம் பாகுபலி. அதனுடைய இரண்டு பாகங்களும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி வருகின்றன. அந்த வரிசையில் இப்போது புஷ்பா 2வும் இணைந்து இருக்கிறது. புஷ்பா படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் மீது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

அதனால் அதனுடைய இரண்டாம் பாகம் எந்த அளவு இருக்கப் போகிறது என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையில் புஷ்பா 2 திரைப்படம் அடுத்த மாதம் 6 தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. படம் ரிலீஸ் ஆக இன்னும் 31 நாட்கள் இருக்கும் நிலையில் அதனுடைய பிரீ புக்கிங் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

கிட்டத்தட்ட 10 ஆயிரத்து 547 டிக்கெட் விற்கப்பட்டு விட்டதாகவும் 2208 ஷோக்கள் திரையிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் 605 இடங்களில் இந்த படம் ரிலீஸ் ஆகப்போகிறது. மொத்தமாக அமெரிக்கா டாலர் படி $250K டாலர் கலெக்ஷனை அள்ளி இருக்கிறது .

இதன் மூலம் 31 நாட்களுக்கு முன்பாகவே அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்ட திரைப்படமாக இந்த புஷ்பா 2 திரைப்படம் திகழ்கிறது. இதற்கு முன்பாக சலாம், கல்கி, தேவாரா போன்ற படங்கள் 18 நாட்களுக்கு முன்பாக தான் ப்ரீ புக்கிங் நடந்ததாம். ஆனால் புஷ்பா 2 திரைப்படம் தான் 31 நாட்களுக்கு முன்பாக அதிக கலெக்ஷனில் ஃப்ரீ புக்கிங் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story