புஷ்பா 2 ரிலீஸ் தேதிய சொல்லிட்டாங்க!.. செம ட்ரீட்டுக்கு ரெடியாகும் அல்லு அர்ஜூன் ஃபேன்ஸ்!..

Pushpa 2: தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராகவும், அதிக ரசிகர் கூட்டங்களை வைத்திருக்கும் நடிகராகவும் இருப்பவர் அல்லு அர்ஜூன். பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவரின் நடிப்பில் 2021ம் வருடம் வெளியான திரைப்படம்தான் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த திரைப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் நபர்களின் வாழ்க்கையை பற்றி உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த தொழிலில் இருக்கும் ரிஸ்க், சுயநலம், போலீஸ் கெடுபிடி, நம்பிக்கை துரோகம் என பலவற்றையும் காட்டியிருந்தனர். இந்த படத்தில் புஷ்பாவாகவே வாழ்ந்திருந்தார் அல்லு அர்ஜூன். இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்திருந்தார்.

படம் மட்டுமில்லாமல் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. முதல் பாகத்தின் இறுதியில் பஹத்பாசில் வில்லனாக காட்டப்பட்டிருந்தார். அவர் வந்த சில காட்சிகள் அதிர வைத்தது. படம் உருவாகும்போதே இரண்டு பாகங்கள் என முடிவு செய்துவிட்டனர்.

pushpa2

புஷ்பா முதல் பாகம் சூப்பர் ஹிட் என்பதால் இரண்டு பாகத்தை எடுக்க துவங்கினர். கடந்த 2 வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சுமார் 400 கோடி செலவில் இப்படம் உருவாகி வருவதாக சொல்லப்பட்டது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார்.

ஆனால், சுகுமாருக்கும், அல்லு அர்ஜூனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படு பல நாட்கள் படப்பிடிப்பு நடக்காமல் போனதாகவும் செய்திகள் வெளியானது. இதனால், படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. இதனால், ரிலீஸ் தேதியும் பலமுறை அறிவிக்கப்பட்டு அது நடக்காமல் போனது.

இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என அப்படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்திருக்கிறது. அதன்படி சரியாக இன்னும் 75 நாட்களில் வெளியாகிறது புஷ்பா 2. உங்களின் காத்திருப்பு திரையில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவங்களை கொடுக்கும் என குறிப்பிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

Admin
Admin  
Related Articles
Next Story
Share it