21 நாளில் உச்ச தொகை தென்னிந்தியாவில் இதுதான் முதல்முறை… புஷ்பா2 அதிகாரப்பூர்வ வசூல்…

by Akhilan |   ( Updated:2024-12-26 12:30:13  )
புஷ்பா 2
X

புஷ்பா 2

Pushpa2: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா2 திரைப்படத்தின் வசூல் தென்னிந்திய சினிமா துறையை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

மைத்திரி மூவி மேக்கர் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

பல வருட இடைவெளிக்கு பின்னர் இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பிரம்மாண்டமாக உலகம் எங்கும் வெளியானது. படத்தில் நிறை குறைகள் இருந்தாலும் ரசிகர்களிடம் தொடர்ச்சியான வரவேற்பு கிடைத்தது. ஆனால் பட முதல் நாள் சிறப்பு காட்சியின் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் இறந்தார்.

இந்த பிரச்சினையை அடுத்து அல்லு அர்ஜுன் உடனே கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கிடைத்தும் அன்றைய இரவு சிறையில் இருந்த பின்னரே காலையில் விடுவிக்கப்பட்டார். இது படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் உருவாக்கியது. தொடர்ந்து காட்சிகள் அதிகரிக்கப்படும், வசூலும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வந்தது.

இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக கொடுத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் வழக்கில் முழு ஆதரவையும் கொடுத்து செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

பெண் இறந்த பிறகும் திரையரங்குகள் அல்லு அர்ஜுன் இருந்ததாக போலீஸ் தரப்பு காட்சிகளை வெளியிட்டது. ஆனால் திரையரங்கு நிர்வாகம் அந்தப் பெண் இறந்தே அரை மணி நேரம் கழித்து அல்லு அர்ஜுன் உள்ளே வந்ததாக சிசிடிவி வெளியிட்டது.

சட்ட பிரச்சினை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க புஷ்பா 2 தொடர்ச்சியாக தன்னுடைய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. அந்த வகையில் 21 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் 1705 கோடி ரூபாய் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்து இருக்கிறது.

ஆயிரம் கோடி வசூலை தாண்ட பல பெரிய நடிகர்கள் தவித்து வரும் நிலையில் அசால்டாக 2000 கோடியை அல்லு அர்ஜுன் நெருங்க இருக்கிறார். இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாக்களில் புஷ்பா 2 தான் இதை முதல் முறையாக செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: இனி காதல் மட்டும்தான்!..'ரெட்ரோ' லுக்கில் மாஸ் காட்டும் சூர்யா.. டைட்டில் டீசர் எப்படி இருக்கு?..

Next Story