என்ன இப்படி இறங்கிட்டாங்க.. கூலி படத்திற்கு பம்பர் ஆஃபர்.. இப்படியும் ஆள் திரட்டலாமா..
இந்த வருடம் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர் போன்ற பிரம்மாண்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். பான் இந்தியாளவில் உருவான இது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த எந்த திரைப்படங்களும் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிதாக வெற்றி பெறவில்லை. இண்டஸ்ட்ரி ஹிட் என ஒரு படம் கூட கொடுக்கவில்லை. கமல்ஹாசனின் தக் லைஃப் படம் அதை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் வந்த வேகத்தில் காணாமல் போனது. அதன் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பு இடையில் வெளியான கூலி திரைப்படமும் தொடர்ந்து நெகட்டிவ் ரிவ்யூவக்கால் அடிக்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதும் தற்போது வரை 500 கோடிக்கும் அதிகமான வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஜெயிலரை விட குறைவான வசூல் என்பதாலும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வருவதாலும் கூலி படத்திற்கு அடிமேல் அடி விழுகிறது. இதற்கெல்லாம் கூலி வெற்றி விழாவில் ரஜினி அடி கொடுப்பார் என்று சினிமா பிரலங்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது ரீ-ரிலீஸ் படங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியாகி இருந்த விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 35 வருடங்கள் கழித்தும் இந்த படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல வாரம் வாரம் புது வரவு அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆன கூலி திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்கள் பெற்று கவலைக்கிடத்தில் இருக்கிறது. தியேட்டருக்கு கூட்டம் வராததால் பிரபல திரையரங்கமான pvr inox. கூலி திரைப்படத்தை பார்க்க வருபவருக்கு ஆஃபர் ஒன்ற வழங்கி இருக்கிறது
பிவிஆர் திரையரங்கில் ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம் என்று திரையரங்க நிர்வாகம் அறிவிப்பு கொடுத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் கேஷ்பேக், இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட், பேங்க் ஆபர் போன்றவற்றை அள்ளி வழங்குகிறது. படம் ஏற்கனவே 'A' சர்டிபிகேட் வேற வாங்கி உள்ளதால் படத்திற்கான கூட்டம் சுத்தமாக குறைந்துள்ளது. அதனால் ஆடியன்சை அதிகரிக்க திரையரங்க நிர்வாகம் இப்படி ஒரு பம்பர் ஆப்பரை வழங்கி இருக்கிறது. இந்நிலையில் தியேட்டருக்கு ஆள் திரட்ட இப்படி ஒரு யோசனையா என்று சினிமா ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
