மூக்குலலாம் ரத்தம் வருது!.. ரோஸ் மில்க் ராஷி கன்னாவை பஞ்சர் ஆக்கிட்டாங்களே!.. பாப்பா ஃபயர் தான்!

by SARANYA |
மூக்குலலாம் ரத்தம் வருது!.. ரோஸ் மில்க் ராஷி கன்னாவை பஞ்சர் ஆக்கிட்டாங்களே!.. பாப்பா ஃபயர் தான்!
X

கடந்த ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் ராஷி கன்னா நடித்து வெளியான அரண்மனை 4 திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியை பெற்றது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ராஷி கன்னா தற்போது ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2013ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான மெட்ராஸ் கஃபேயில் ஹீரோயினாக அறிமுகமான ராஷி கன்னா தெலுங்கில் ஓஹலு குசாகுசலாடே படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதை தொடர்ந்து பெங்கால் டைகர், சுப்ரீம், ஜெய் லவ குசா , தோலி ப்ரேமா, வெங்கி மாமா , பிரதி ரோஜு பண்டகே போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.


மேலும், ராஷி கன்னா 2018இல் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 3 மற்றும் 4 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ் மற்றும் ஃபர்ஸி ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.


உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டும் உடலை ஸ்ட்ராங்காக வைத்துள்ளார். இவை அவருக்கு படங்களில் உள்ள சண்டைக் காட்சிகளில் நடிக்க உதவியாக இருக்கும்.


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ராஷி கன்னா அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ராஷி கன்னா தனது முகம், கை, கால்களில் அடி பட்டு ரத்த காயத்துடன் உள்ள புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். மேலும், அதில் அவர் சில கதாப்பாத்திரங்கள் எப்படி வேண்டும் என கேட்பதில்லை. ஆனால், சில கதாப்பாத்திரங்களுக்கு உங்கள் மூச்சு, உடல், காயங்கள் தேவைப்படுகிறது, நீங்கள் புயலாக மாறும்போது இடி முழக்கங்களுக்கு கூட நீங்கள் அசைய மாட்டீர்கள் , விரைவில்... என பதிவி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இது சர்தார் 2 படப்பிடிபின் போது எடுத்த சண்டைக்காட்சியாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Next Story