ரத்தம் தெறிக்கணும்.. இல்லன்னா நடிக்க மாட்டாரு.. ரஜினியை பங்கமாய் கலாய்த்த ராதாரவி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதிலும் ஸ்லோமோஷன் வாக்கிங்கில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி இன்னும் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு கடும் போட்டியாளராக விளங்குகிறார். எத்தனை புது முகங்கள் வந்தாலும் ரஜினி என்ற ஒரு முகத்தை யாராலும் மறக்கடிக்க முடியவில்லை. வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களும் ரஜினியின் தீவிர ரசிகனாகவும் அவரின் ஸ்டைல்களை பாலோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
என்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அடையாளத்தை உடைத்து. ரசிகர்களை கவர்ந்தார் ரஜினி. பார்ப்பதற்கு கருப்பு நிறம், நடுத்தர உயரம், வேகமான வசன உச்சரிப்பு இவை அனைத்தும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. அதனுடன் ஸ்டைல் மன்னனாகவும் வலம் வந்தார். தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படங்களில் நடித்து இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
ரஜினி தன்னிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் முதலில் அவர் கேட்பது படத்தில் மொத்தம் எத்தனை ஃபைட் என்று தான் கேட்பார். முரட்டுக்காளையில் ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்த பின்னர் அதன் பிறகு வந்த அனைத்து திரைப்படங்களிலும் ஆக்சன் காட்சிகளுக்கு தனி இடம் கொடுப்பார். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த கூலி திரைப்படத்திலும் வன்முறையின் உச்சம் இருக்கும்.
அதனால் அந்த திரைப்படம் 'A' சர்டிபிகேட் பெற்றது. இருப்பினும் தற்போது வரை படம் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தாவூத் ஆடியோ லான்ச் விழா நடிகர் ராதாரவி ரஜினிகாந்த் பங்கமாக கலாய்த்து உள்ளார். அதில் இந்த தாவுத் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. ”இந்த காலத்தில் இந்த மாதிரி படங்கள் அதிகம் வருகிறது. ஏன் ரஜினி சாருக்கு படம் முழுவதும் ரத்தமாக இருக்கும்.
அவரே ரத்தத்தை நம்பி இருக்கும் போது நம்ம எல்லாம் சாதாரண நடிகர். அதை எல்லாம் கவலைப்படாமல் நடிச்சிட்டு போகணும்” என்று கூறியுள்ளார். ராதாரவி சொல்வதைப் பார்த்தால் இன்று ரத்தம் காட்டாமல் படங்கள் எடுத்தால் கண்டிப்பாக படம் தோல்வி தான் என்று சூட்சமமாக பேசியிருக்கிறார்.
