விஜயகாந்த் இல்லாதது எப்படி இருக்குன்னு தெரியுமா? ராதாரவியோட ஃபீலிங் இதுதான்...
மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்தும், தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அவரது ஆருயிர் நண்பரான ராதாரவி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
வாகை சந்திரசேகர், தியாகு, பாண்டியன், எஸ்.எஸ்.சந்திரன், நானு, விஜயகாந்த் ஆறு பேரும் நல்ல ப்ரண்ட்ஸ். அது ஒரு நல்ல டீம். அக்கப்போரு குரூப்னு சொல்வாங்க. சிவாஜி மறைவுக்கு நிறைய கூட்டம் வந்தது. விஜயகாந்த் தலைவரா இருந்ததால அங்கு வந்து முன்னாடி நின்னு பல விஷயங்களையும் செய்து எங்களை வழிநடத்தினார்.
கூட்டத்தை நம்பி நாம ஏமாந்துடக்கூடாது. எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரைக்கும் கலைஞரால ஜெயிக்க முடியலயே. அவருதான் 11 வருஷம் ஆட்டிப்படைச்சாரு. அதே மாதிரி கலைஞரை மாதிரி ஒரு பெரிய ஆளுமையை எதிர்த்து ஜெயிக்க முடியாது. ஆனா ஜெயலலிதா ஜெயிச்சிருக்காரே.
விஜய்க்கு அப்பாவா நாளையதீர்ப்பு படத்துல நடிச்சிருக்கேன். அப்போ அவரைப் பார்த்தா இப்படி அரசியல்ல இறங்குவாருன்னு தெரியாது. பேசவே மாட்டாரே. இப்போ இவ்ளோ பேசிருக்காருன்னா அது பெரிய விஷயம்.
அவரு அரசியல் தெரியப் போயித்தான் வந்துருக்காரு. அவரு அளவுக்கு எல்லாம் எனக்கு அரசியல் தெரியாது. அவருக்கு சக்சஸ் ஆக சான்ஸ் இருக்கு. வரலாம். வராமலும் இருக்கலாம். அதுக்குள்ள அரசியல்ல என்னென்ன மாற்றங்கள் வரப்போகுதுன்னு தெரியல.
திமுக வளர்ந்து முட்டி மோதி 18 வருஷம் கழிச்சி 67லதான் ஆட்சிக்கு வந்தாங்க. அப்படின்னா ஆரம்பிச்ச உடனேயே எல்லாரும் வந்துடுவாங்கன்னு எப்படி சொல்ல முடியும்? என்று கேட்கிறார் ராதாரவி. விஜயகாந்த் இல்லாதது மனசு வருத்தத்தோடு தான் இருக்கேன். நாங்க எப்பவுமே விஜயகாந்தோட நடிச்சிக்கிட்டு இருக்க மாட்டோம். ப்ரீ டைம்ல ஒண்ணா இருப்போம்.
நட்பு படம் சூட்டிங் கோபிச்செட்டிப்பாளையத்துல நடக்குது. அப்போ விஜயகாந்த் பிக்கப் பண்ணினாரு. அப்புறம் அந்தியூர் போனோம். அங்கே வாகை சந்திரசேகர் சூட்டிங் நடக்குது. அவரையும் பிக்கப் பண்ணிட்டுப் போனோம். அதே மாதிரி இனி ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்களான்னு தெரியல. அவங்க எல்லாரும் இருந்துருந்தா நல்லாருக்கும்.
தேமுதிகவை பிரேமலதா வழிநடத்துறதால தான் அந்த கூட்டம் அப்படியே இருக்கு. இப்போ பையனை டிரெய்ன் அப் பண்றாங்க. மேடையில எல்லாம் பேச வைக்கிறாங்க. நான் உடம்புசரியில்லாம இருக்கும்போதுதான் விஜயகாந்த் இறந்தாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.