12 வருடத்துக்கு பின் அம்மாவான ரஜினி பட நடிகை.. இப்படி ஒரு போட்டோவ போட்டு இருக்காங்களே!..

by Ramya |
radhika apte
X

radhika apte

ராதிகா ஆப்தே:

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே கடந்த 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்திருந்த டோனி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரீட்சியமானார். அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களை காட்டிலும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஹிந்தியில் படு பிஸியாக நடிக்க தொடங்கி விட்டார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை.

ராதிகா ஆப்தே திருமணம்:

நடிகை ராதிகா ஆப்தே கடந்த 2011 ஆம் ஆண்டு பெனெடிக்ட் டெயிலர் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் ஒரு வருடம் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் பிஸியாக நடித்து வந்தார் ராதிகா ஆப்தே. சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த காரணத்தால் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தார்.


இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். படங்களில் வாய்ப்பு குறைந்த காரணத்தால் தொடர்ந்து வெப் சீரியஸ்களிலும் அரை நிர்வாண காட்சி, முழு நிர்வாண காட்சி, படுக்கையறை காட்சி என அனைத்திலும் தாராளம் காட்டி வந்தார்.

கர்ப்பம்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இருந்தார் ராதிகா ஆப்தே. அப்போது கர்ப்பமாக இருப்பதை காண முடிந்தது. இதையடுத்து பேபி பம்புடன் இருக்கும் போட்டோ சூட் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் ராதிகா ஆப்தேவிற்கு குழந்தை பிறந்து இருக்கின்றது .


குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாகவும் கூறி இருக்கின்றார். ஆனால் அவர் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கூறவில்லை. இருப்பினும் அவரின் தோழி வெளியிட்டுள்ள பதிவில் ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது உறுதியாகி இருக்கின்றது. தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார் நடிகை ராதிகா ஆப்தே.

Next Story