பிக்கப் ஆகாத பென்ஸ்!.. அடுத்த வேலையை தொடங்கிய லாரன்ஸ் மாஸ்டர்.. இது அதுல்ல!..

பேய் திரைப்படங்கள் என்றாலே பயந்து பார்த்த காலம் போய் தற்போது அதனை ரசித்துப் பார்க்க ஆரம்பித்து இருக்கின்றோம். அதற்கெல்லாம் காரணம் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மாஸ்டர் தான். தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது திரைப்படத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.
தற்போது ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார். முனி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹாரர் படங்களை இயக்கத் தொடங்கிய ராகவா லாரன்ஸ் அதனைத் தொடர்ந்து காஞ்சனா பாகங்களை இயக்கி வந்தார். இவரது இயக்கத்தில் வெளியான காஞ்சனா 2, 3 போன்ற பாகங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
தொடர்ந்து இயக்குனராக மட்டுமில்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் பிஸியாக நடித்து வந்த ராகவா லாரன்ஸ் தற்போது பென்ஸ் என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை லோகேஷின் உதவியாளரான இரத்தினகுமார் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் கோலிவுட் வட்டாரங்களில் இந்தத் திரைப்படம் ட்ராப் என்று கூறி வருகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இதற்கிடையில் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக காஞ்சனா படத்தின் நான்காவது பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.
காஞ்சனா நான்கு படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக படத்திற்கு கதாநாயகிகளை தேர்வு செய்யும் பணி தொடங்கி இருக்கின்றது. ஏற்கனவே இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பது ஏறத்தாழ உறுதியாகி இருக்கும் நிலையில் தற்போது பாலிவுட் நடிகையான நோரா பதேசி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகின்றது. காஞ்சனா படத்தின் நான்காவது பாகம் எப்போது வெளியாகும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்படம் விரைவில் தொடங்க இருப்பது அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் இரண்டு கிளாமர் குயின்களையும் நடிகர் ராகவா லாரன்ஸ் இறக்க இருக்கின்றார்.
இதில் யார் பேயாக நடிக்கப் போகின்றார் என்பது தெரியவில்லை. மேலும் இந்த திரைப்படத்தை மும்பையை சேர்ந்த கோல்டு மினிட்ஸ் என்கின்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.