AK64 படத்தில் அஜித்துடன் இணையும் 2 நடிகர்கள்?!.. இந்த டிவிஸ்ட்ட எதிர்ப்பாக்கலயே!...
                                    
                                குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பது ஏற்கனவே உறுதியாகவிட்டது. இது அஜித்தின் 64வது திரைப்படமாகும். இந்த படத்தை பிரபல பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி. அதிலும் அஜித்தின் சம்பளம் மட்டுமே 183 கோடி என சொல்லப்படுகிறது முதலில் இந்த படத்தை தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ், சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ், லைகா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகினார்கள். ஆனால் அஜித்தின் சம்பளத்தையும், பட்ஜெட்டையும் கேட்டவர்கள் எங்களால் முடியாது என மறுத்து விட தற்போது இந்த படத்தை ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரிக்கவிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே அஜித் கார் ரேஸில் இருந்தார். தற்போது அதற்கு பிரேக் விட்டிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய இடத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரிடமும் இயக்குனர் பேசி வருகிறாராம். இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் அந்த கதாபாத்திரத்தின் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வில்லன் வேடமா? இல்லை வேறு ஏதாவது முக்கிய கதாபாத்திரமா என்பது தெரியவில்லை.
‘அமர்க்களம் படத்தில் என்னை ஒரு முழு பாடலுக்கு ஆட வைத்தார் அஜித். அந்த படம்தான் எனக்கு வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது. அவருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் ராகவா லாரன்ஸ். எனவே கண்டிப்பாக அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட மாட்டார் என்றே கணிக்கப்படுகிறது.
