1000 கோடி பட்ஜெட்!.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் போலயே.. ராஜமௌலினா பின்ன சும்மாவா!..
இயக்குனர் ராஜமௌலி: தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமாக உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை எஸ்எஸ் ராஜமௌலியை சேரும். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கின்றது. மகதீரா தொடங்கி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றது.
அதிலும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கார் வரை சென்று சாதனை படைத்திருந்தது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படங்களையும் இயக்காமல் இருந்து வந்த இயக்குனர் ராஜமௌலி தற்போது தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
அந்த வகையில் இந்த திரைப்படம் தொடர்பான தகவல் உறுதியான நிலையில், இன்று இப்படத்தின் பூஜை தொடங்கி இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறிவருகிறார்கள். பொதுவாக ராஜமௌலி ஒரு படத்திற்கு ஓராண்டுக்கும் மேலாக ஒரு நடிகரிடம் இருந்து கால்சீட் வாங்குவார். அதனால் இந்த திரைப்படம் பிக்கப் ஆவதற்கு இவ்வளவு நாட்கள் ஆனதாக கூறப்படுகின்றது.
தற்போது படத்தின் பூஜை இன்று தொடங்கி இருக்கின்றது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகளுடன் உருவாக இருப்பதால் ஆறு மாதத்திற்கு மேலாகவே பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் மகேஷ்பாபு கடந்த ஆறு மாதங்களாக தனது உடலில் சில மாற்றங்களையும் செய்து வந்திருக்கின்றாராம்.
இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக அதிரடி ஆக்சன்களில் நடிப்பதற்காக பிரியங்கா சோப்ராவை நடிக்க வைப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றார் ராஜமௌலி. இதற்காக அவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். தற்போது பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்றிருக்கும் பிரியங்கா சோப்ரா அங்கு தொடர்ந்து பிஸியாக நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படம் 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாகவும், மேலும் இந்த திரைப்படம் ஒரு ஜங்கிள் அட்வென்ச்சர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுப்பதற்கு இயக்குனர் ராஜமௌலி திட்டமிட்டு இருக்கின்றார். மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி படத்தின் முதல் பாகம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும், இரண்டாவது பாகம் 2029 ஆம் ஆண்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருக்கின்றது.
மேலும் பிரியங்கா சோப்ரா இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பிரிதிவிராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படம் தொடர்பான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
1000 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக இருப்பதால் நிச்சயம் இது ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பொதுவாக ராஜமவுலி திரைப்படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இதில் இவ்வளவு பெரிய பட்ஜெட் என்றால் சொல்லவா வேண்டும்.