1. Home
  2. Cinema News

Jananayagan: ஜனநாயகனுக்கு ஆப்பு வச்ச பிரபாஸ்!.. கடைசி படம்பா.. பாத்து செய்யுங்க!…

Jananayagan: ஜனநாயகனுக்கு ஆப்பு வச்ச பிரபாஸ்!.. கடைசி படம்பா.. பாத்து செய்யுங்க!…

Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்காக நான்கு வருடங்கள் போட்ட உழைப்பு அவரது சினிமா கெரியரை மொத்தமாக மாற்றி விட்டது. அதாவது அவரின் எல்லா படங்களும் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ,ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகும் அளவுக்கு பேன் இண்டியா ஸ்டாராக மாறிவிட்டார் பிரபாஸ்.

அந்தப் படத்திற்கு பின் அவர் நடிப்பில் வெளிவந்த சாஹோ, சலார், ஆதிபுரூஸ், ராதே ஷ்யாம், கல்கி உள்ளிட்ட எல்லா படங்களுமே 5 மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எனவே இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் பிரபாஸ் மாறி இருக்கிறார். இந்நிலையில் பிரபாஸ் ‘ராஜா சாப்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இது ஹாரர், ஆக்சன் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

இந்த திரைப்படத்தை மாருதி என்பவர் இயக்கி இருக்கிறார். அதிக பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் இந்த படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், நித்தி குமார் என மூன்று அழகான ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் தத் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

Jananayagan: ஜனநாயகனுக்கு ஆப்பு வச்ச பிரபாஸ்!.. கடைசி படம்பா.. பாத்து செய்யுங்க!…
#image_title

இந்நிலையில்தான் இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. டிரெய்லரை பார்க்கும்போது படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இப்படம் பொங்கலை முன்னிட்டு 2026 ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை எனில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படமும் அதே தேதியில்தான் வெளியாகிறது.

இதனால் தமிழ்நாட்டில் ஜனநாயகனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் அதிக தியேட்டர்கள் கிடைக்காது. ஏனெனில் ஆந்திராவிலும் சரி, ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளிலும் தெலுங்கு படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுப்பார்கள். எனவே அந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்பதால் ஜனநாயகன் படத்தின் வசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதையடுடுத்து ‘விஜயின் கடைசி படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?’ என ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகிறார்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.