ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்தில் குவிந்த ஒட்டுமொத்த திரையுலகம்.. வைரலாகும் புகைப்படம்

by ROHINI |
isari
X

isari

இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது தயாரிப்பாள ஐசரி கணேசனின் மகள் திருமணம். தமிழ் திரையுலகில் ஒரு பெரிய தயாரிப்பாளராக இருந்து வருகிறார் ஐசரி கணேஷ். பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இப்போது கூட மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை எடுத்து வருகிறார். சென்னை ஈசிஆர் ரோடில் அமைந்திருக்கு ஆர்.கே. கன்வென்ஷன் சென்ட்டரில் மகளின் திருமணத்தை நடத்தியிருக்கிறார் ஐசரி கணேஷ்.

isari


அதுமட்டுமில்லாமல் திருமண வரவேற்பையும் அதே ஈசிஆர் ரோட்டில் இருக்கும் பாஷ்யம் பிரார்த்தனாவில் நடைபெற உள்ளது. இதை முடித்து விட்டு நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் ஒரு சார்ட்டர்ட் ஃபிளைட்டில் மாலத்தீவு சென்று திருமணம் சார்ந்த வைபங்களை கொண்டாட இருக்கிறார்கள். திருச்சியை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபரான உமா சங்கர் மற்றும் சித்திரா தம்பதியான லஷ்வின் குமாரைத்தான் ஐசரி கணேஷின் மகள் திருமணம் செய்திருக்கிறார்.

isari

isari

இவர்கள் திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரஜினி, கமல், சத்யராஜ், கௌதம் மேனன், ஜெயம் ரவி,பாக்யராஜ் என ஒட்டுமொத்த கோடம்பாக்கமே ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்தில்தான் குவிந்திருக்கின்றனர். ஐசரி கணேஷை பொறுத்தவரைக்கும் தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி நடிகராகவும் சிறந்த கல்வியாளராகவும் இருக்கிறார்.

isari

isari

வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிறுவி பல மாணவர்களுக்கு கல்வியும் வழங்கி வருகிறார். சிறந்த மனிதராகவும் திகழ்ந்து வருகிறார். இந்த திருமணத்தில் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் சேர்ந்து வந்ததுதான். ஏற்கனவே மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழும் ரவிமோகன் தனக்கும் கெனிஷாவுக்கும் இடையே தவறான் உறவு இல்லை என்றும் அவர் எனக்கு தோழிதான் என்றும் கூறினார்.

isari

isari

ஆனால் அந்த பிரச்சினைக்கு பிறகு முதன் முறையாக ரவிமோகனும் கெனிஷாவும் இணைந்து இந்த திருமணத்தில்தான் கலந்து கொண்டனர். திருமணம் என்னதான் பிரம்மாண்டமாக இருந்தாலும் ரசிகர்களின் பார்வை ரவிமோகன் பக்கம் தான் திரும்பியிருக்கிறது.

isari

isari



Next Story