அமிதாப் பயோபிக்தான் ரஜினியின் அந்தப் படமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே

ரஜினியின் நடிப்பில் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகக் கூடிய திரைப்படம் வேட்டையன். இதுவரை வேட்டையன் படத்தை விட கூலி திரைப்படத்தை பற்றித்தான் ரசிகர்கள் அதிகமாக பேசி வந்தார்கள். ஆனால் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழாவிற்கு பின்னாடி வேட்டையன் படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது. அதற்கு காரணம் படத்தின் முதல் இரண்டு சிங்கிள் மற்றும் மேடையில் ரஜினி பேசிய பேச்சு..

73 வயதிலயும் கிட்டத்தட்ட 55 நிமிடம் ஒரு மனிதன் விடாமல் பேசிக்கிட்டிருந்தார் என்றால் சினிமா மீது அவருக்கு இருக்கும் பணிவும் மரியாதையையும் காட்டுகிறது. ரஜினி பேசியதில் மிகவும் ஹைலைட்டாக இருந்தது அமிதாப் பச்சனை பற்றி கூறியதுதான். இந்தப் படத்தில் அமிதாப் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருந்தாலும் அவரை பற்றி ஏன் ரஜினி இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறார் என்றால் இன்றைய இளைஞர்களுக்கு அவரின் வாழ்க்கை வரலாறு தெரியவேண்டும் என்பதுதான்.

அடிப்படையில் அமிதாப் ஒரு கோடீஸ்வரர் வீட்டு பையனாக இருந்திருக்கிறார். அமிதாப்பின் அம்மா அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் தோழியாக இருந்தவராம். அமிதாப்பிற்கு நடிக்க ஆசை என கேள்விப்பட்டதும் அவருடைய அப்பா அம்மா அமிதாப்பின் கையில் 200 ரூபாயை கையில் கொடுத்து எங்கள் பெயரை பயன்படுத்தாமல் சாதிச்சு காட்டு என சொல்லி அனுப்பினார்களாம்,

அப்படி பல படங்களில் நடிக்கும் போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் அமிதாப்பிற்கு விபத்து ஏற்பட அப்போது இரண்டு மீட்டிங்கில் கலந்து கொள்ள இருந்த இந்திராகாந்தி அந்த மீட்டிங்கை கேன்சல் செய்தாராம். அப்போதுதான் அமிதாப் யார் என்றே சினிமா துறையில் தெரியவந்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே கதைதான் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ திரைப்படம் என இந்த செய்தியை பகிர்ந்த செய்யாறு பாலு கூறினார்.

கிட்டத்தட்ட தம்பிக்கு எந்த ஊரு திரைப்படத்தில் பெரிய பணக்கார வீட்டு பையனாக இருக்கும் ரஜினியை அவருடைய தந்தை வி.எஸ். ராகவன் செந்தாமரையிடம் அனுப்பி பொறுப்புள்ளவனாக மாற்ற வேண்டும் என சொல்லி அனுப்புவார். இதே கதைதான் அமிதாப்பின் கதை என செய்யாறு பாலு கூறினார். மேலும் அமிதாப்பின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு கட்டாயம் தெரியவேண்டும் என ரஜினி நினைத்திருக்கிறார்.

மேலும் இந்த முறை இளைஞர்களுக்கு பல அறிவுரைகளையும் வேட்டைய விழாவில் ரஜினி பேசியது அனைவரையும் ஈர்த்திருக்கிறது. பல ரசிகர்கள் ரஜினியின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தெரிகிறது என கூறினார்கள். அதே போல் ஞானவேல் ரஜினியிடம் இந்தப் படத்திற்கு அமிதாப் வேண்டும் என சொன்னதும் தயாரிப்பாளரிடம் சொல்லி பேச சொல்லுங்கள் என ரஜினி சொல்லிவிட்டாராம்.

அதற்கு காரணம் ரஜினி கேட்டால் ரஜினிக்காக அமிதாப் பணமே வாங்காமல்தான் நடித்துக் கொடுப்பார். ஆனால் கண்டிப்பாக அமிதாப்புக்குரிய சம்பளம் அவருக்கு போய்சேர வேண்டும் என்றால் அதை தயாரிப்பாளர்தான் பேச வேண்டும் என்ற காரணத்தினால்தான் என செய்யாறு பாலு கூறினார்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it