50 வருஷமா எப்படி சினிமாவுல தாக்கு பிடிக்கிறீங்க?!.. கேள்விக்கு ரஜினி சொன்ன நச் பதில்....

Vettaiyan: பெங்களூரில் நடத்துனராக வேலை செய்து வந்த சிவாஜிராவுக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்ட நண்பர்களின் உதவியோடு சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்தார். திரைப்படக்கல்லூரிக்கு வந்த பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். சிவாஜிராவ் ரஜினிகாந்தாக மாறினார்.

அதன்பின் கமலுடன் இணைந்து பல படங்களிலும் நடித்தார். பெரும்பாலும் வில்லன் வேடமே கிடைத்தது. அதுதான் ரஜினிக்கும் பொருத்தமாக இருந்தது. ஒருகட்டத்தில் ‘இருவரும் பிரிந்து படம் நடிப்போம்’ என ரஜினியும் கமலும் பேசி முடிவெடுத்து பிரிந்தனர். அதன்பின் ஹீரோவாக நடிக்க துவங்கினார் ரஜினி.

ஒருகட்டத்தில் வசூல் மன்னனாகவும், சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். 80களில் முக்கிய நடிகராக மாறினார். கமல், மோகன், விஜயகாந்த் என பலர் இருந்தாலும் ரஜினி படங்கள் வசூலை அள்ளியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியை ரசித்தார்கள். இப்போதும் ரசிக்கிறார்கள்.

ரஜினியிடம் ஒரு மேஜிக் உண்டு. அதுதான் 50 வருடங்களாக அவரை ரசிக்க வைக்கிறது. ரஜினியுடன் நடித்த பல நடிகர்கள் காணாமல் போய்விட்டனர். அல்லது குணச்சித்திர நடிகராக மாறிவிட்டனர். ஆனால், ரஜினி இன்னமும் ஹீரோவாக கலக்கி வருகிறார். 72 வயதிலும் அவரால் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க முடிகிறது.

இந்திய சினிமா உலகில் இந்த வயதில் ஹீரோவாக கலக்கி வருபவர் ரஜினி மட்டுமே. வருகிற 10ம் தேதி வேட்டையன் படம் வருகிறது. ஒருபக்கம், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஜெயிலர் 2 படம் உருவாகவிருக்கிறது. இந்நிலையில், நேற்று நடந்த வேட்டையன் பட விழாவில் பேசிய அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

அடிப்படையில் நான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதால் படப்பிடிப்பு தளங்களில் ரஜினி சாரிடம் நிறைய கேள்வி கேட்பேன். 50 ‘வருடங்களாக எப்படி சினிமாவில் தாக்கு பிடிக்கிறீர்கள்?’ என ஒருமுறை கேட்டேன். அதற்கு ரஜினி சார் ‘Adjust, Accommodate, Adopt' என சொன்னார். அதிலிருந்து நானும் அதை பின்பற்ற துவங்கிவிட்டேன் என அவர் சொல்லியிருக்கிறார்.




Admin
Admin  
Related Articles
Next Story
Share it