படம் பார்த்து கமல் மட்டும் அப்படி சொல்லல? பேர மாத்திக்குறேன்..மாஸ் காட்டிய ரஜினி

kamal
நேற்று கூலி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் கூலி. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வழக்கம் போல படத்தில் பிஜிஎம் ஸ்கோரை பிரம்மாதப்படுத்தியிருக்கிறார் அனிருத்.
நேற்று நடந்த விழாவில் ரஜினி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். கலகலப்பாகவும் நேர்மையாகவும் அவருடைய பேச்சு இருந்ததாக பல பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாண்டி மாஸ்டர் தலைவா டான்ஸில் கலக்கிரலாம் என்று சொல்லும் போது ‘இது 1950 மாடல். எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் கழண்டு கிடக்குது. ரொம்பவும் ஆட வச்சிராதீங்க’ என்று சொன்னதாக ரஜினி கலகலப்பாக பேசியிருக்கிறார்.
அதோடு லோகேஷின் நேர்காணல் குறித்தும் கிண்டலாக பேசியிருந்தார்.லோகேஷ் அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேட்டி கொடுத்திருந்தார். அதை உட்கார்ந்து பார்த்தேன். முடியல. படுத்து பார்த்தேன் அப்பவும் முடியல. தூங்கி எழுந்தும் பார்த்தேன் அப்பவும் முடியல. முழுவதும் பேசிக் கொண்டுதான் இருந்தார் என பேசியிருக்கிறார் ரஜினி.
அதோடு படத்தில் மிக முக்கிய கேரக்டராக பார்க்கப்படுவது ஸ்ருதிஹாசனின் கேரக்டர்தான். அதை பற்றி கூறும் போது படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பு அற்புதம். உலக நாயகன் பொண்ணுடா என நிருபித்திருக்கிறார். கமலே இந்தப் படத்தை பார்த்த பிறகு பெருமை கொள்வார். படத்தை பார்த்து ஸ்ருதியின் நடிப்பு கமல் சூப்பர்னு சொல்லாவிட்டால் என் பேரை நான் மாத்திக்குறேன் என ரஜின் கூறினார்.

hasan
இந்த வீடியோவை பார்த்த சில பேர் தலைவா ஏற்கனவே உங்க பேரை பாலச்சந்தர் மாத்திவிட்டார் என கிண்டலடித்து வருகின்றனர். தான் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் மற்றவர்களின் நடிப்பை பார்த்து பிரமிப்பது ரஜினியை தவிற வேறு யாராலும் முடியாது.