போரா? கைவிட்டாச்சா? இந்தியா - பாக் போர் குறித்த கேள்விக்கு உலறி கொட்டிய ரஜினி

by ROHINI |
rajini
X

rajini

Rajini: வழக்கம் போல ரஜினி விமான நிலையத்தில் ஷாக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அவரிடம் ஏதாவது ஒரு கேள்வியை பற்றி கேட்கும் போது பெரும்பாலும் அப்படியா நடந்தது என்ற வகையில் நம்மிடமே திருப்பி கேள்வி கேட்பார். இது பத்திரிக்கையாளர்களுக்கு கண்டெண்ட் கொடுத்த மாதிரி ஆகிவிடும். அப்படித்தான் இன்றும் நடந்திருக்கிறது. கடந்த இரண்டு வார காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் போர் நடந்தது.

இதில் நம் பாரத பிரதமர் மோடி திடமான சில முடிவுகளை எடுத்து மக்களை காப்பாற்றுவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். எல்லையில் நம் வீரர்கள் திறம்பட செயல்பட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பெரும்பாலான இடங்களை சுக்கு நூறாக உடைத்து எறிந்திருக்கின்றனர். நாளுக்கு நாள் போர் தீவிரமாக அண்டை நாடுகள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் அறிவுரைகளை வழங்கி போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில் டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்த இரு நாடுகளும் முன் வந்தது பெரும் மகிழ்ச்சி என தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதிலிருந்தே இரு நாடுகளும் போரை நிறுத்துவது குறித்து பேச்சு வார்த்தையில் இறங்க ஒரு சுமூகமான வழி கிடைத்தது.

இதை பற்றி இன்று ரஜினியிடம் ‘போரை கைவிடப்பட்டது பற்றி உங்கள் கருத்து’ என நிருபர் ஒருவர் கேட்க, ‘கைவிட்டாச்சா? யாரு சொன்னா ’ என கேட்டு அப்படியே அதிர்ச்சியுடன் பார்த்து கேட்டார். உடனே இன்னொரு நிருபர் இந்த போர் குறித்தும் பகல்ஹாம் தாக்குதல் குறித்தும் தீவிரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என சொல்லியிருந்தீர்கள்? இப்போது நமது வீரர்கள் சாதித்திருக்கிறார்கள். இதை பற்றி என கேட்டபோது உடனே ரஜினி ‘ நமது வீரர்கள் பாகிஸ்தானில் நுழைந்து அங்குள்ள தீவிரவாதிகளை வேட்டையாடியிருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய பாராட்டுக்கள். ’

‘அதுமட்டுமில்லாமல் இந்த போரை மிகவும் திறமையா கையாண்டு வரும் நம் மோடிக்கும் என்னுடைய பாரட்டுக்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா, முப்படை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்’ என கூறினார் ரஜினி.

Next Story