1. Home
  2. Cinema News

இப்படியெல்லாமா ஆசைப்பட்டார்? வரப்போகும் மனைவி குறித்து ரஜினி போட்டுவைத்த மனக்கணக்கு

இப்படியெல்லாமா ஆசைப்பட்டார்? வரப்போகும் மனைவி குறித்து ரஜினி போட்டுவைத்த மனக்கணக்கு

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உலகமே போற்றும் வகையில் ஒரு உன்னதமான நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். தன்னுடைய படங்களின் மூலம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் ரஜினிகாந்த் தற்போது ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால்சலாம் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் லோகேஷ் இயக்கும் படம் தான் ரஜினியின் கடைசி படம் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதையும் படிங்க : சும்மா கொஞ்ச நேரம் வந்து நடிங்க!.. நைசா பேசிய இயக்குனரை நம்பி போய் கார்த்திக் பட்ட பாடு!… இப்படியெல்லாமா ஆசைப்பட்டார்? வரப்போகும் மனைவி குறித்து ரஜினி போட்டுவைத்த மனக்கணக்கு rajini1 இப்படி 70 வயதை கடந்தாலும் இன்னும் அதே சுறுசுறுப்புடனும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையிலும் சினிமாவில் இன்னும் கால் பதித்து வருகிறார் ரஜினி. ஆரம்ப காலங்களில் அத்தனை கெட்ட பழக்கங்களும் கொண்டவராக விளங்கினார் ரஜினிகாந்த். ஆனால் வாழ்க்கை சில காலத்திற்குப் பிறகு பாடத்தை கற்பிக்கும் என்று சொல்வதைப் போல ரஜினிக்கும் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்தது. இன்று அத்தனை கெட்ட பழக்கங்களையும் துறந்த ஒரு துறவியைப் போல வாழ்ந்து வருகிறார் ரஜினி. ஆனால் ஆரம்பத்தில் இருந்து அவர் எத்தனையோ கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருந்த நிலையிலும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த். அவர்களுடைய சந்திப்பே ஒரு வித்தியாசமான சந்திப்பாக இருந்திருக்கிறது. இதையும் படிங்க : ‘16 வயதினிலே’ பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.யா? பாரதிராஜா கொடுத்த ஷாக் கல்யாணத்திற்கு முன்பே ஒரு பத்திரிக்கையில் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றிய எண்ணத்தை மிகவும் வெளிப்படையாக கூறி இருந்தாராம் ரஜினி காந்த். அதாவது தனக்கு வரப்போகும் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் மேலும் நான் எத்தனையோ பெண்களிடம் பழகி இருக்கிறேன் அதில் ஒரு சில பெண்கள் அழகாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை என் மனைவியாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததே இல்லை என்று கூறினாராம். இப்படியெல்லாமா ஆசைப்பட்டார்? வரப்போகும் மனைவி குறித்து ரஜினி போட்டுவைத்த மனக்கணக்கு rajini2 நான் பழகிய பெண்களிடம் நான் இதுவரை தவறான எண்ணத்தில் எந்த ஒரு வாக்குறுதியையும் கொடுத்ததில்லை. மேலும் தவறான எண்ணத்தில் அவர்களை நான் தொட்டதும் இல்லை என்றும் கூறினாராம். அந்த சமயத்தில் தான் தில்லுமுல்லு படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்தை சந்திக்க கல்லூரி பெண்கள் பேட்டி எடுக்க வந்திருந்தார்களாம். இதையும் படிங்க : ரஜினிக்கும் முத்துராமனுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை? கடைசி வரை அது நடக்கவே இல்லை அதில் ஒரு பெண் ரஜினியிடம் நேராக வந்து ஹாய் ஐ அம் லதா என கூறி இப்போது ரஜினியின் மனைவியாக இருக்கும் லதா ரஜினி காந்த் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம். அவரைப் பார்த்த முதல் பார்வையிலேயே தன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என நினைத்தாரோ அதை லதாவிடம் முதன் முதலாக பார்த்தாராம் ரஜினி. அதிலிருந்து இவர் தான் தன் மனைவி என தன் மனதில் எழுதிக் கொண்டாராம். இந்த தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.