1. Home
  2. Cinema News

Rajini: ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?!... செம டிவிஸ்ட்டே இருக்கே!...

rajini
ரஜினியின் அடுத்த பட அப்டேட்

ஜெயிலர் 2

Jailer 2: நடிகர் ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் 2-வுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூலை தொடும் முதல் படமாக கூலி இருக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அதில் பாதியை மட்டுமே அப்படம் வசூல் செய்தது. லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் அமைத்திருந்த கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதற்கு இதற்கு காரனம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடுத்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தில் மோகன்லால், சிவ்ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் கேமியோ வேடங்களில் நடித்தது போல இந்த படத்தில் பாலையா உள்ளிட்ட சில நடிகர்கள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு பின் கமலுடன் இணைந்து ரஜினி ஒரு படத்தில் நடிக்க போகிறார், அதை லோகேஷ் கனகராஜ் இயக்க ப்போகிறார் என்கிற செய்தி பல நாட்களாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் திடீர் திருப்பமாக அந்த படத்திற்கு முன் ரஜினி சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டடிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

sundar c

கமலுடன் இணைந்து நடிக்கவுள்ள படத்தின் வேலைகள் தூங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம். இருவருக்கும் பொருந்துவது போல கதையை உருவாக்க தாமதமாகும் என்பதால் அதற்குள் ஒரு படத்தில் நடித்து விடலாம் என ரஜினி யோசிக்கிறாராம். சுந்தர் சி-யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். கடந்த பல வருடங்களாகவே ரஜினி சீரியஸான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு ஜாலியான படத்தில் நடிக்கலாம் என ரஜினி யோசித்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.