1. Home
  2. Cinema News

Rajini Kamal: கத்தியை காட்டி கமலை எச்சரித்த ரஜினி.. இவர்கள் பிரிவுக்கு இதுதான் காரணமா?

Rajini Kamal: கத்தியை காட்டி கமலை எச்சரித்த ரஜினி.. இவர்கள் பிரிவுக்கு இதுதான் காரணமா?

Rajini Kamal: இப்போது டாக் ஆஃப் தி டவுனாக இருப்பது நேற்று சைமா விருது வழங்கும் விழாவில் கமல் பேசிய ஒரு விஷயம் தான். அவரிடம் நீங்களும் ரஜினியும் ஒன்றாக சேர்ந்து மீண்டும் நடிப்பதாக சொல்கிறார்களே? அது உண்மையா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நேரடியாக கமல் ஆமாம் என்று சொல்லாமல் வழக்கம் போல அனைவரையும் குழப்பி விட்டு அதன் பிறகு பதில் அளித்தார்.

அதை கேட்கும் போது இவர்கள் சேர்ந்து நடிக்கிறாங்களா? இல்லையா என்ற சந்தேகம் வந்தது .ஆனால் அவர் பேசியதை வைத்து பார்க்கும் போது மீண்டும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள் என்பதை போலத்தான் இருந்தது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் இதை பற்றி கூறும் போது ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்பதை முதன் முதலில் வலைப்பேச்சில்தான் தெரிவித்தோம்.

ஆனால் இன்னும் எனக்கு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் சேர்ந்து நடிக்கும் படம் வருமா வராதா என்பதுதான் என்னுடைய சந்தேகம் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். இது ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை பல மேடைகளில் கமல் கூறினாலும் அதுதான் உண்மையான காரணமா என்பதை பார்க்கவேண்டும்.

சமீபத்தில் கூட சைமா விழாவில் கமல் ஒரு பிஸ்கட் கதை சொல்லி அவர்கள் பிரிவுக்கான காரணத்தை கூறியிருந்தார். ஆனால் இவர்கள் பிரிவுக்கு உண்மையான காரணமே ஒரு முறை ரஜினி கத்தியை எடுத்து கமலை குத்த போய்விட்டாராம். நினைத்தாலே இனிக்கும் படம் அவர்கள் சேர்ந்து நடித்த கடைசி படம் என்றாலும் அலாவுதீன் அற்புத விளக்கு படத்தில் கமலும் ரஜினியும் சேர்ந்து சண்டை போடுவது போல காட்சி இருக்கும்.

அதில் உண்மையாகவே ரஜினி கமலை கத்தியால் குத்த போய்விட்டாராம். அது கொலை முயற்சிக்கான குத்தல் இல்லை. எச்சரிக்கை விடுவது மாதிரியான குத்தல்தான் என அந்தணன் கூறினார். ஏனெனில் அந்த நேரத்தில் ரஜினி மிகவும் மன அழுத்தத்தில் இருந்த நேரம். யாருமே ரஜினியுடன் சேர்ந்து நடிக்க பயப்படுவார்கள். ரயில் நிலையத்தில் கூட ரஜினியால் கலவரம் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

Rajini Kamal: கத்தியை காட்டி கமலை எச்சரித்த ரஜினி.. இவர்கள் பிரிவுக்கு இதுதான் காரணமா?
anthanan

அப்படிப்பட்ட சூழலில்தான் அலாவுதீன் அற்புத விளக்கு படத்தில் இப்படியொரு சண்டை நடந்தது. அதிலிருந்தே இருவரும் பிரிந்துவிட்டதாக அந்தணன் கூறினார். ஆனால் இதையெல்லாம் மேடை நாகரீகம் கருதி கூட கமல் சொல்லியிருக்க மாட்டார். இருந்தாலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சேர்வது வியாபார ரீதியாக நன்மைதான் என்றும் அந்தணன் கூறினார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.