Categories: Cinema News latest news throwback stories

வாய்ப்பு கேட்டு போனவரை ராக்கிங் செய்த ரஜினி!.. சூப்பர்ஸ்டாருக்கு இன்னொரு முகம் இருக்கு!..

Rajinikanth: பொதுவாக ரஜினிகாந்த் ரொம்பவே அமைதியான குணம் கொண்டவர் என்ற எண்ணம் தான் பலரிடம் இருக்கும். ஆனால் அவர் தான் ஷூட்டிங்கில் இருந்தபோது வாய்ப்பு கேட்டு வந்த நடிகரை கலாய்த்து கேலி செய்து இருக்கிறார் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

திரைப்படக் கல்லூரியில் படித்த நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். ஆரம்ப காலங்களில் ரஜினிகாந்த் மிகவும் சுட்டியாக எல்லோரிடத்திலும் கலகலப்பாக பேசிக் கொண்டுதான் சூட்டிங்கில் இருப்பாராம். அவரை பார்ப்பவர்களிடம் கூட கேலி பேசுவாராம்.

இதையும் படிங்க: பழைய படங்களில் கெத்து காட்டிய பாடகிகள்… சொல்லி அடித்த கில்லி இவங்கதான்!..

இப்படி தான் ஒருமுறை நடிகர் செளந்தர் வாய்ப்பு கேட்டு வாகினி ஸ்டுடியோஸ் சென்றாராம். வி.சி. குகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தனிக்காட்டு ராஜா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இயக்குனர் யார் என்று தெரியாத நடிகர் சௌந்தர் நேராக ரஜினிகாந்த் இடம் சென்று வாய்ப்பு கேட்டு இருக்கிறார்.

ஆனால் ரஜினிகாந்த் தான் யார் என்பதை சொல்லாமல் ஒளிப்பதிவாளர் நிவாஸிடம் கையை காட்டி அவரிடம் சென்று வாய்ப்பு கேளுங்கள் என திருப்பி விட்டாராம். இதை தொடர்ந்து நிவாஸ் இன்னொரு வரை கையை காட்டி அவரிடம் கேட்க சொன்னாராம்.

இப்படி காலேஜில் ராக்கிங் செய்வது போல கலாய்த்தனர். அதை தொடர்ந்து நேராக போய் வாய்ப்பு கேளுங்கள் என தைரியமாக என்னை அனுப்பிவிட்டது ரஜினிகாந்த் தான்.

இதையும் படிங்க: அப்பா முதல் சல்மான்கான் வரை… தபுவின் வாழ்க்கையை சிதைத்த ஆண்கள்… வெறுத்துப்போய் செய்த காரியம்!…

அதனை தொடர்ந்து அவருடன் எனக்கு வேறு எந்தவித பிரச்னையும் இதுவரை நடந்தது இல்லை. அவ்வளவு நல்ல மனிதர் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

Published by
Shamily