ரஜினி-சுந்தர்.சி-கமல்.. டிவிஸ்டுக்கு மேல டிவிஸ்ட்டா இருக்கே!.. பரபர அப்டேட்!..
 
                                    
                                ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் ரஜினியும் கமலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகவும், அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் கூலி பட ரிசல்ட் ரஜினியை யோசிக்க வைத்திருப்பதாக சொல்லப்பட்டது. மேலும், விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய ரஜினி ‘இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை’ என கூறினார்.
எனவே ரஜினி, கமல் நடிக்கப் போகும் படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில்தான் ரஜினியும், கமலும் இணையும் படத்தை லோகேஷ் இயக்கப்போவது இல்லை, அந்த படத்தை இயக்கப்போவது நெல்சன் என்கிற செய்தி சமீபத்தில் வெளியானது. அதோடு அந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ஒருபக்கம் ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தியும் சமீபத்தில் வெளியானது. வழக்கமாக சுந்தர்.சி படங்களை தயாரிக்கும் ஏசி சண்முகம் மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கப் போவதாக முதலில் செய்திகள் வெளியானது.இந்நிலையில்தான் இந்த படத்தையும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது தற்போது தெரிய வந்திருக்கிறது.

அதாவது ரஜினி அடுத்தடுத்து நடிக்கவுள்ள இரண்டு படங்களையுமே கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. தக் லைப் படத்தால் அவருக்கு 178 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதால் கமலுக்கு உதவ முடிவெடுத்த ரஜினி அவரின் தயாரிப்பில் இரண்டு படங்களை நடிக்க முடிவெடுத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. அதன்பின் சுந்தர்.சி படம் துவங்குகிறது. சுந்தர்.சி வேகமாக படமெடுப்பவர் என்பதால் சில மாதங்களிலேயே படத்தின் வேலையை முடித்து விடுவார். 2027ம் வருடம் நெல்சன் இயக்கத்தில் ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படம் தொடங்கவிருக்கிறது.
ஏனெனில் இந்த படத்தின் கதையை எழுத நெல்சன் ஒரு வருட காலம் அவகாசம் கேட்டிருக்கிறாராம். அதோடு ரஜினி இந்த படத்தோடு சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதாகவும் அதிர்ச்சி செய்தி வெளியாகி வருகிறது.

