வேட்டையன் கணக்கு தப்பா முடிஞ்சு போச்சு! ஞானவேல் ராஜாவுக்கு இருந்த கோபம்

by rohini |
vettaiyan
X

vettaiyan

ஞானவேல் ராஜா சமீபத்தில் கூறிய ஒரு கருத்து ரஜினி ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. பொதுவாக சொன்ன அந்த கருத்து ரஜினியை பற்றிதான் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் என ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் பொங்கி எழுந்துள்ளனர். அதாவது கங்குவா படத்தில் காஸ்ட் அண்ட் க்ரூ பற்றி எதையுமே அறிவிக்கப்படவில்லையே என கேட்டபோது அதற்கு ஞானவேல் ராஜா ஒவ்வொரு நாளும் படத்தில் நடிக்கும் பெரிய நடிகர்களை பற்றிய அப்டேட் கொடுத்தும் பாக்ஸ் ஆபிஸில் ஒன்னும் பண்ண முடியலையே என்பது போல அவர் கூறியிருந்தார்.

அந்த நேரத்தில் ரிலீஸான திரைப்படம் தான் வேட்டையன். ஒரு வேளை வேட்டையனை பற்றி தான் அவர் குறிப்பிட்டு இருந்தாரா என அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் வேட்டையனை பற்றி தான் அவர் பேசியிருக்கிறார் என வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அது ஞானவேல் ராஜாவுக்கு உண்டான கோபத்தின் வெளிப்பாடு தான் என்றும் அந்தணன் கூறினார்.

கங்கவா திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என உறுதியாக இருந்துள்ளனர். சிறுத்தை சிவாவும் ரஜினியிடம் நேரடியாகவே போய் அக்டோபர் 10ஆம் தேதி நாங்கள் ரிலீஸ் செய்கிறோம் என பேசி இருக்கிறார். ஆனால் ரஜினியோ இதற்கு முன் விசுவாசம், பேட்ட இரண்டு திரைப்படமும் வரவில்லையா?

இரண்டுமே ஹிட்டானதுல. அது போல இந்த முறையும் இருக்கட்டும் என ரஜினி கூறினாராம். இதனால் சிறுத்தை சிவா கொஞ்சம் வருத்தப்பட்டதாக தெரிந்திருக்கிறது. அதேபோல் ஞானவேல் ராஜாவும் லைக்கா நிறுவனத்திடம் நேரடியாக கேட்டிருக்கிறார். ஆனால் லைக்காவும் ரஜினியே ஆசைப்படுகிறார்.

நாங்கள் என்ன பண்ணுவது என சொல்லிவிட்டார்களாம். ஆனால் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலை பொறுத்தவரைக்கும் அவருக்கு அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதில் உடன்பாடே இல்லையாம். தீபாவளிக்கு தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து இருக்கிறார்.

அவர் மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனமும் அப்படித்தான் நினைத்திருந்தார்களாம். ரஜினியின் பிடிவாதத்தில்தான் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருக்கிறது வேட்டையன் திரைப்படம் .ஆனால் ரஜினி நினைத்ததற்கு எதிர் மாறாக முடிந்து விட்டது. அதற்கேற்ற வகையில் மழைக்காலமும் வந்துவிட்டதால் வசூலில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் கோட் திரைப்படத்தை ரஜினி ரசிகர்கள் வச்சு செய்ததன் விளைவாக வேட்டையன் திரைப்படத்தை விஜய் ரசிகர்களும் வச்சு செய்துவிட்டனர். மேலும் கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி அந்த படமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தால் வேட்டையன் திரைப்படத்தால் வெற்றியை ருசித்திருக்க முடியாது என்றும் அந்தணன் கூறி இருக்கிறார்.

மேலும் 240 கோடிக்கு மேல் வசூல் என சொல்வதெல்லாம் உறுதிப்படுத்த முடியாத தகவலாக தான் இருக்கிறது. ஏனெனில் லைக்கா நிறுவனம் மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஒரு படம் பண்ண நினைப்பதால் வேட்டையன் திரைப்படத்தின் உண்மையான வசூலை சொல்லி அதில் ஏதாவது பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே 240 கோடிக்கு மேல் வசூல் என கூறி வருகின்றனர்.

ஆனால் இதில் உண்மை இல்லை என்றும் அந்தணன் கூறி இருக்கிறார். இந்த ஒரு கோபம் தான் ஞானவேல் ராஜாவை அப்படி பேச வைத்திருக்கிறது. என்றும் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

Next Story