ரஜினியின் அந்த படத்தை விட விஜயின் குருவி ஹிட்தான்… தயாரிப்பாளரே சொல்லிட்டாரே!

Vijay: கடந்த சில வருடங்களாகவே விஜய் மற்றும் ரஜினிகாந்தின் படங்கள் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருவது வழக்கமாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அவரின் திரைப்படங்கள் ஜெயிலருக்கு முன்னர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும். இதனால் அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பல போட்டிகள் நிலவியது.

ஒரு கட்டத்தில் பிரபல நடிகரான சரத்குமார் வாரிசு பட விழா மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என பேசினார். அந்த விஷயம் பெரிய அளவில் பூகம்பத்தை கிளப்பியது. ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா மற்றும் கழுகு கதையை கூற ரசிகர்கள் மேலும் கொந்தளித்தனர். விஜய் தான் காக்கா என அவரை ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து கலாய்க்க தொடங்கினர்.

பிரபலங்களும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதைத்தொடர்ந்து லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய் எப்பவும் சூப்பர் ஸ்டார் ஒருவர்தான். ஆனால் அப்பாவுடைய சட்டையை மகன் ஆசைப்பட்டு போட்டுக் கொள்வது போல தான் என இரு பொருள்பட நான் அந்த பட்டத்திற்கு ஆசைப்பட்டால் என்ன தவறு என பேசி இருப்பார்.

அது மட்டுமல்லாமல் தற்போது கோலிவுட்டில் முதல் நடிகராக இருப்பது விஜய் தான். அவருக்கு ஹாலிவுட் நடிகர்களை விட அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. சம்பளத்தை வைத்து கணக்கு செய்தாலும் ரஜினியை விட விஜய் தான் முந்திக்கொண்டு செல்கிறார்.

அதுபோல தற்போது வெளியாகும் படங்களின் வசூலிலும் கூட ரஜினியின் படத்தை விஜயின் திரைப்படங்கள் போட்டி போட்டு வென்று வருவது தான் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது. ஆனால் விஜய்யின் மோசமான திரைப்படம் எனக் கூறப்படும் குருவி வசூல் ரீதியாக வெற்றிப் படம் என தயாரிப்பாளரும், முன்னாள் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

அவர் கூறும் போது, கதை ரீதியாக அப்படத்தில் சில குளறுபடிகள் இருந்தது. ஆனால் அப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படம் தான். ஆனால் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாகவே குளறுபடிகளால் தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் பல வருடங்களாகவே ரஜினியை விஜய் முந்திக் கொண்டுதான் சென்று இருக்கிறார் என பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

Related Articles
Next Story
Share it