படம்னா இப்படித்தான் இருக்கணும்!.. சமுத்திரக்கனி படத்தை ரஜினி இப்படி பாராட்டிட்டாரே!..

by Murugan |
படம்னா இப்படித்தான் இருக்கணும்!.. சமுத்திரக்கனி படத்தை ரஜினி இப்படி பாராட்டிட்டாரே!..
X

Rajinikanth: நடிகர் ரஜினி ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த ரசிகரும் கூட. ஒரு நல்ல ரசிகனே நல்ல கலைஞனாக உருவாக முடியும் என்பதற்கு ரஜினியே முக்கிய உதாரணம். பெரிய இயக்குனர், அறிமுக இயக்குனர், பெரிய நடிகர், அறிமுக நடிகர் என எந்த பாராபட்சமும் பார்க்க மாட்டார். அவருக்கு ஒரு படம் பிடித்தால் உடனே படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டுவார்.

இதை பல வருடங்களாக அவர் பின்பற்றி வருகிறார். நடிகனாவதற்கு முன்பே எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், நாகேஷ், எம்.ஆர்.ராதா, நம்பியார் என பலரையும் திரையில் ரசித்திருக்கிறார். இதை அவர் நடிக்கும் பல படங்களிலும் சொல்லியும் இருக்கிறார். குறிப்பாக கமலை மிகவும் ரசித்தவர் ரஜினி.

கமலின் அபூர்வ சகோதரர்கள் பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு கமல் வீட்டுக்கு போய் தூக்கத்திலிருந்து அவரை எழுப்பி பாராட்டிவிட்டு வந்தார். நாயகன் படத்தை பார்த்துவிட்டும் உடனே கமலுக்கு போன் செய்து பாராட்டினார். கமல் இயக்கி நடித்த ஹே ராம் படத்தை 40 முறைக்கும் மேல் பார்த்துவிட்டதாக சொல்லியிருந்தார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஏதேனும் புதுப்படம் வெளியாகி பேசப்பட்டால் உடனே பார்த்துவிடும் பழக்கம் ரஜினிக்கு இருக்கிறது.


அமரன், நந்தன், வாழை என பல படங்களையும் பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார். அமரன் பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.




இந்நிலையில்தன, நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் திரு.மாணிக்கம் படத்தையும் பாராட்டி ரஜினி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். ஒரு நல்ல திரைப்படத்தின் அடையாளம் அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் சில நாட்கள் நம் நினைவில் இருக்க வேண்டும். அப்படததில் இருக்கும் ஒரு நல்ல விஷயத்தை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்க வேண்டும். அதை திரு.மாணிக்கம் படம் செய்திருக்கிறது என அவர் பாராட்டியிருக்கிறார்.

Next Story