ஹூக்கும் பாடலில் முக்கிய வரியை மாற்ற சொன்ன ரஜினி!. இவர போயா திட்டுறீங்க!..

Vettaiyan: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்த திரைப்படம்தான் ஜெயிலர். அண்ணாத்த படம் பெரிய வெற்றியை பெறாத நிலையில் ரஜினி நடித்த திரைப்படம் இது. இந்த பட்டத்தில் ரஜினிக்கு வில்லனாக மலையாள நடிகர் வினாயக் நடித்திருந்தார். மேலும், யோகிபாபு, வசந்த்ரவி என பலருக்கும் நடிக்க தமன்னா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

மேலும், மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் கேமியோ வேடத்தில் கலக்கி இருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு காக்கா கதையே இப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. இந்த படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் நெல்சனின் சம்பளமும் 50 கோடியாக அதிகரித்தது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அனிருத்தின் பாடல்கள்தான். குறிப்பாக தமன்னா ஆடிய காவாலா பாடல் படத்தின் வெற்றிக்கே முக்கிய காரணமாக இருந்தது. மேலும், ரஜினி ரசிகரக்ளுக்கென்றே எழுதப்பட்ட ‘ஹுக்கூம் ‘தலைவரு நிரந்தரம்’ பாடல் கூஸ்பம்ஸாக அமைந்தது.

இந்த பாடலில் உன் அலும்ப பார்த்தவன்.. உங்கப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்....... இவன்பேர தூக்க நாலு பேரு..பட்டத்த பறிக்க நூறு பேரு..’ போன்ற வரிகள் இடம் பெற்றிருந்தது. இதுதான் சர்ச்சையையும் ஏற்படுத்தி விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த பாடலை சூப்பர் சுப்பு என்பவர் எழுதியிருந்தார். இவர் தீவிர ரஜினி ரசிகன். வேட்டையன் பாட விழாவில் பேசிய அவர் ‘எத்தனையோ பேர் இருந்தும் ஹூக்கும் பாடலை எழுத எனக்கு வாய்ப்பு கொடுத்தார் அனிருத். இப்ப பேட்டிகளில் ‘வேறு யாருக்கு பாட்டெழுத ஆசைப்படுறீங்க’ என கேட்கிறார்கள். நான் என் தலைவனுக்கு எழுதவே ஆசைப்படுகிறேன்’ என உருகியிருக்கிறார்.

இந்த பாடலில் ‘தலைவரு நிரந்தர சூப்பர்ஸ்டாருடா’ என்றுதான் முதலில் எழுதியிருக்கிறார் சூப்பர் சுப்பு. ஆனால், அப்படி சொல்லக் கூடாது என ரஜினி சொன்ன பின்னரே ‘தலைவரு களத்துல சூப்பர்ஸ்டாருடா’ என மாற்றி இருக்கிறார்கள். இப்போது ஜெயிலர் 2 படத்தின் கதையை எழுதி வருகிறார் நெல்சன். ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பின் ஜெயிலர் 2வில் அவர் நடிக்கவிருக்கிறார்.

Admin
Admin  
Related Articles
Next Story
Share it