Rajini Kamal: கமலுக்காக 2 படங்கள்!.. நட்புன்னா என்னென்னு தெரியுமா?!. நிரூபித்த ரஜினி!...
சினிமா உலகில் இரண்டு பெரிய நடிகர்கள் பல வருடங்கள் நட்பாக இருப்பது என்பது மிகவும் அரிது. ஏனென்றால் சினிமா என்பது போட்டி உலகம். உன் படம் ஓடுகிறதா?.. என் படம் போடுகிறதா? என்கிற போட்டி எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஆனால், இதில் ரஜினி - கமல் நட்பு மட்டும் விதிவிலக்கு.
ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான போது அவருக்கும், கமலுக்கும் இடையேயான நட்பு துவங்கியது. தொடர்ந்து இருவரும் 10 படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து தனியாக நடிக்க துவங்கினார்கள். ரஜினி சூப்பர் ஸ்டாராகவும், வசூல் மன்னனாகவும் மாறினார். கமல் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த பல பரிசோதனை முயற்சிகளை தனது படங்களில் செய்து பார்த்தார். அதில் நஷ்டங்களும் ஏற்பட்டது..
சினிமாவில் போட்டி என்றாலும் தனிப்பட்ட முறையில் ரஜினியும் கமலும் நல்ல நண்பர்கள். அதுவும் ஆத்மார்த்தமான நண்பர்கள். இதை பல மேடைகளில் கமலே சொல்லியிருக்கிறார்
. தற்போது அந்த நட்புக்கு மரியாதை கொடுத்திருக்கிறார் ரஜினி. தக் லைப் படத்தை தயாரித்த வகையில் கமலுக்கு 178 கோடி நஷ்டம். இதை கேள்விப்பட்ட ரஜினி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு படங்கள் நடித்துக் கொடுக்க முடிவு எடுத்திருக்கிறாராம். அதில் ஒன்று சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவுள்ள படம்.

இரண்டாவது நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து ரஜினி நடிக்கவுள்ள திரைப்படம். இதில் ஆச்சரியம் என்னவெனில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகும் படத்திற்கு ரஜினி சம்பளம் எதுவும் பேசவில்லை. ஏனெனில், அதையும் கமல் பைனான்ஸ் வாங்கிதான் கொடுக்க வேண்டும் என்பதால் அதுவும் கமலுக்கு கடனில் சேரும். எனவே லாபத்தில் பங்கு என பேசி தனது மகள் ஐஸ்வர்யாவை தயாரிப்பாளர்களில் ஒருவராக படத்தில் சேர்த்திருக்கிறார் ரஜினி.
இப்படி நஷ்டத்தில் இருக்கும் கமலுக்கு ரஜினி 2 படங்கள் நடித்துக் கொடுக்க முன்வந்திருப்பது கோலிவுட்டில் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் ‘நட்பென்றால் இப்படி இருக்க வேண்டும்.. இப்பொழுதுள்ள இளைய தலைமுறை இதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்’ என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
