1. Home
  2. Cinema News

கூலியோடு காலியான லோகேஷ்.. ரஜினி-கமல் காம்போ வாய்ப்பே இல்லையா?.. தலீவரே சொல்லிட்டாரே

கூலியோடு காலியான லோகேஷ்.. ரஜினி-கமல் காம்போ வாய்ப்பே இல்லையா?.. தலீவரே சொல்லிட்டாரே

ரஜினி-கமல் அறிமுகம் :

தமிழ் சினிமாவின் அடையாளங்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் இவர்களின் ஆதிக்கம் ஆரம்பித்தது. அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகர்களாக இருந்து, வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு கடுமையான போட்டியில் அளித்து வருகின்றனர். ஆரம்ப காலங்களில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் பிரிந்து தனித்தனியாக நடிக்க தொடங்கினர். தங்களுக்கான தனி தனி பாதையை உருவாக்கி அதில் பயணிக்க தொடங்கிவிட்டனர்.

நடிப்பில் வேறுபாடு :

கமல் நடிப்பில் புதுமையை புகுத்தி அதன் மூலம் ரசிகர்களை entertain செய்வார். அதுமட்டுமில்லாமல் சினிமாவின் என்ன புதிய technology வந்தாலும் அதை உடனே கற்றுத் தெரிந்து தன்னுடைய படங்களில் பயன்படுத்தி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு தயாரித்துக் கொண்டே இருப்பார். ரஜினி பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டைல் என்று கமர்சியல் பாதையில் பயணிப்பார். இதனால் இருவருக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் உருவானது.

தங்களின் பாதையில் பயணித்து உச்சம் தொட்ட நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து ஒன்றாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அந்த ஆசை சுமார் 46 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிறைவேற போகிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடிக்கப் போவதாக சமூக வலைதளங்கள் வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.

உறுதி செய்த கமல் :

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் அமரன் படத்திற்காக கமலுக்கு விருந்து வழங்கப்பட்டது அப்பொழுது கமலிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கமலும் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கப் போகிறோம் என்று ஒத்துக் கொண்டார். இந்நிலையில் இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி படமாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்பவே ஆரவாரம் செய்ய தொடங்கி விட்டனர். இந்த படத்திற்கு இன்று இருக்கும் லோகேஷ் தான் இயக்குனர் என்றும் விக்ரம், கூலியை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

மௌனம் கலைத்த ரஜினி :

இந்நிலையில் சமீபத்தில் ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி இதுகுறித்து அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அடுத்ததாக நான் ரெட் ஜெயன்ட் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ்காக ஒரு படம் பண்ண போகிறேன். அதற்கு இன்னும் இயக்குனர் முடிவாகவில்லை. ரெண்டு பேரும் இணைந்து act பண்ணனும்னு ஆசை. அதற்கான correct ஆன கதை,கதாபாத்திரம் அமையனும். அமைந்த உடன் நடிக்கிறேன். ஆனால் அந்த plan இருக்கு. கதை கதாபாத்திரம் இன்னும் fix ஆகவில்லை. என்று சொல்லியுள்ளார்.

அப்போ இதிலிருந்து அந்த படத்திற்கு லோகேஷ் இயக்குனர் இல்லை என்பது தெரிகிறது. கூலி படத்திற்கு வந்த விமர்சனத்தால் ரஜினி இந்த மாதிரியான முடிவை எடுத்திருக்கலாம் என்பது தெரிகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.