1. Home
  2. Cinema News

பிடிக்காது என்றாலும் ரஜினிக்காக செய்த லதா!. அவருக்காக தன்னையே மாற்றிக்கொண்ட ரஜினி...

பிடிக்காது என்றாலும் ரஜினிக்காக செய்த லதா!. அவருக்காக தன்னையே மாற்றிக்கொண்ட ரஜினி...

Latha Rajinikanth: கோலிவுட்டில் உச்ச நடிகராக இருந்த ரஜினிகாந்த் தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை விரும்பி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குள் இருந்த காதலை கேட்கும் போது பலருக்கும் ஆச்சரியமானதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.  பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கை தான் லதா. காலேஜில் படித்து கொண்டு இருந்தவர். தன்னுடைய கல்லூரி இதழுக்காக ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வருகிறார். முதல் சந்திப்பே காதலில் முடிய ஒய்.ஜி.மகேந்திரனிடம் இதை நேரடியாக ரஜினியே சொன்னாராம். இதையும் படிங்க:  நடிகைகளை காதல் வலையில் வீழ்த்திய கமல்ஹாசன்… லிஸ்ட் என்னங்க இவ்வளோ பெருசா போகுதே? பின்னர் இருவீட்டிலும் பேசி இருவருக்கும் திருப்பதியில் ரொம்பவே எளிமையாக திருமணம் நடந்தது. தொடர்ச்சியாக 1982ம் ஆண்டு ஐஸ்வர்யாவும், 1984ம் ஆண்டு செளந்தர்யாவும் பிறந்தனர். இருந்தும் ரஜினிக்கு மனைவியின் மீதான காதலில் எந்த குறையும் வைக்கவில்லையாம். லதா ரஜினிகாந்த்துக்கு  அசைவம் சாப்பிடும் பழக்கமும் இல்லையாம். ஆனால் ரஜினிகாந்துக்கு ஆரம்ப காலத்தில் குடி, சிகரெட்டுடன் அசைவம் சாப்பிடும் பழக்கமும் இருந்ததாம். இதனால் கணவருக்காக அசைவம் சமைப்பதை கற்றுக்கொண்டார். வகை வகையான அசைவ சமையலை செய்து ஷுட்டிங்கிற்கும் கொடுத்து விடுவாராம். அப்படி தன் காதலுக்காக இறங்கிவந்தவர் லதா. ஆனால் மனைவி மீது ரொம்பவே அன்பு வைத்து இருந்த ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் அசைவம் சாப்பிடும் பழக்கத்தினையே விட்டுவிட்டாராம். இதனால் மனைவி கஷடப்பட்டு தனக்காக நான் வெஜ் சமைக்கும் அவசியம் இல்லாமல் போகும் அவருக்கும் விடுதலை கிடைக்கும் என தன் சகாக்களிடம் சொல்லுவாராம்.  இதையும் படிங்க:  கூட நடிச்ச ஆளுசார் நான்.. காசு பணமா கேட்க போறேன்! விஜயை பார்க்க சென்ற இடத்தில் அவமானப்பட்ட நடிகர்

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.