மிரட்டலான மிராய் ட்ரைலர்.. படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்
அனுமன் படத்தில் ஹீரோவாக நடித்த தேஜா சஜ்ஜா தெலுங்கு திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ ஆவார். ஒரு குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான தேஜா பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நம்ம ஊர் கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மாவில் நடித்தது போல, இரண்டு வயதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் இருக்கு ஒரு தனி அடையாளம் கிடைத்தது.
அதன் பிறகு நடித்த அடுத்தடுத்த படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி தெலுங்கு ரசிகர்களின் விருப்பத்தக்க நாயகனாக உருவெடுத்தார். இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ’அனுமான்’ படம் இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. இந்த படத்தில் இவருடன் அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார் வினய் ராய் , ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள்.
அனுதீப் தேவ், கிருஷ்ண சவுரப், கௌரஹரி என மூன்று இசையமைப்பாளர்கள் இந்த படத்திற்காக இசையமைத்தனர். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியானது. மாபெரும் ஹிட் அடித்து 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில் நடிகர் தேஜா சஜ்ஜா தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார்.
அவரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ’மிராய்’, தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதன் டீசர் வெளியாகி தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தது. கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகியிருந்தது.
சரித்திர பின்னணியில் மாஸ் ஆக்ஷன் காட்சிகளோடு, மிரள வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளை கொண்டு பிரம்மாண்டமாக இருக்கிறது. போன முறை அனுமன் கடவுளை பயன்படுத்தியது போல இந்த முறை இராமன் கடவுளை சுற்றி நடப்பது போல் கதைகளம் இருக்கும் என்று ட்ரெய்லர் உணர்த்துகிறது. அப்படியானால் இந்த முறையும் 500 கோடி வசூலை சொல்லி அடிக்க போகிறார் போல தெரிகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் படக்குழு காண்பித்துள்ளது. ட்ரைலரை பார்த்த ரஜினிகாந்த் பட குழுவை வெகுவாக பாராட்டி உள்ளார்.
