லோகேஷ் கேட்டும் No சொன்ன ரஜினி… கூலி படத்தில் நடந்த சம்பவம்…
Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்துக்கான டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன் பதிவிலேயே கூலி படம் 60 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் கூலி படத்திற்கான முன்பதிவுகள் பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கூலி படத்தின் முதல் காட்சிக்கான முன்பதிவு டிக்கெட் 12 கோடி வரை விற்பனையாகி இருக்கிறது.
படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் முன்பதிவிலேயே கூலி படம் 80 கோடி வசூலை தொடும் என்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம், விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கியவர் என்பதாலும் லோகேஷுடன் ரஜினி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் ரசிகர்களிடம் பெரும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது,
இதுதான் முன் பதிவில் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் வெளியே கசிந்து இருக்கிறது.
கூலி படத்தில் ஒரு ஃப்ளாஷ் பேக் காட்சி வருகிறது. அதில் ரஜினியை இளமையாக காட்டியிருக்கிறார்கள். அந்த காட்சியில் ரஜினி தாடி இல்லாமல் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த லோகேஷ் இதை ரஜினியிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் ஜெயிலர் 2 படத்தில் தாடியுடன் நடிப்பதால் தாடியை எடுக்க முடியாது என ரஜினி சொல்லிவிட்டாராம்.
அதுவும் கூலி சூட்டிங் முடிந்த உடனே ஜெயிலர் 2 படத்திற்கு செல்வதால் தாடி எடுக்க முடியாது என கைவிரித்து விட்டாராம். எனவே தாடியுடனே ரஜினியை நடிக்க வைத்து கிராபிக்ஸ் மூலம் தாடியை எடுத்திருக்கிறார்கள் அதை பார்த்த பின் கொஞ்சம் தாடி இருந்தால் நன்றாக இருக்கும் என லோகேஷுக்கு தோன்ற கொஞ்சம் தாடி இருப்பது போல் செட் செய்திருக்கிறார்களாம்.
