அன்று பாபா படத்திற்கு எதிர்ப்பு!. இன்று அவரை வைத்து டிரெய்லர் ரிலீஸ்!.. வாழ்க்கை ஒரு வட்டம்!..

by Murugan |
rajini
X

ரஜினி

Rajinikanth: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரின் சூப்பர்ஸ்டார் பட்டம் இன்னமும் இவரிடம்தான் இருக்கிறது. 72 வயதிலும் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுப்பவர். வேட்டையன் படம் வெளியான பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினியும் அரசியலும்:

1992ம் வருடம் ரஜினி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்த போதே அவரை சுற்றி அரசியல் வந்துவிட்டது. அப்போது மட்டும் அவர் கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட்டிருந்தால் முதல்வராகவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் அதை செய்யவில்லை.


அரசியலுக்கு வருவேன் என கடந்த 25 வருடங்களாக சொல்லி வந்த அவர் இது தொடர்பாக பலரிடமும் ஆலோசனை செய்து வந்தார். இறுதியில் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். ஆனால், அண்ணாத்த படப்பிடிப்பில் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது மருத்துவரின் அறிவுரைப்படி என் உடல்நிலை அரசியலுக்கு செட் ஆகாது என சொல்லிவிட்டார்.

இப்போதும் அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவரும் திடீரென சீமானை சந்தித்து அரசியல் பேசுகிறார். அவர் அரசியலை விட்டாலும் அரசியல் அவரை விடவில்லை. அரசியல் தொடர்பாக பல எதிர்ப்புகளை அவர் பல வருடங்களாகவே சந்தித்து வருகிறார்.


பாபா படத்திற்கு எதிர்ப்பு

குறிப்பாக திரைப்படங்களில் ரஜினி சிகரெட் குடிப்பதையும், மது அருந்துவது போல நடிப்பதையும் பாமக கட்சி கடுமையாக எதிர்த்தது. இளைஞர் கூட்டத்தை ரஜினி சீரழிக்கிறார் என அன்புமணி ராமதாஸ் ஓப்பன் பேட்டி கொடுத்தார். பாபா படம் வெளியானபோது ரஜினி புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதில் வந்ததால் விழுப்புரம், கடலூர் போன்ற சில ஊர்களில் அந்த படம் ஓடும் தியேட்டர்களில் பாமகவினர் பெரும் ரகளையே செய்தார்கள். எனவே, இராமதாஸை கடுமையாக விமர்சித்தார் ரஜினி.

அன்புமணி ராமதாஸ் மகள்:

அதேநேரம், தான் நடிக்கும் படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வராதபடி ரஜினி பார்த்துக்கொண்டார். இப்போது அன்புமணியின் மகள் சங்க மித்ரா சினிமாவில் தயாரிப்பாளராக மாறி அலங்கு என்கிற படத்தை தயாரித்துள்ளார்.


அதோடு, ரஜினியை சந்தித்து பேசி அந்த படத்தின் டிரெய்லரையும் அவரையே வெளியிட வைத்திருக்கிறார். ரஜினியும் மகிழ்ச்சியோடு அதை செய்து கொடுத்திருக்கிறார். இதையடுத்து ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என அரசியல் கட்சியினரும், ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.


Next Story