Jailer2: கூலி ரிசல்ட்ட பார்த்தும் மாறாத ரஜினி!.. ஜெயிலர் 2-விலும் அதே ரிஸ்க்..
நடிகர் ரஜினிகாந்த் ஒரு கலகலப்பான குடும்ப மற்றும் காமெடி படங்களில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது, அவரிடம் உள்ள நகைச்சுவை ரசிகர்கள் ரசித்து பல வருடங்கள் ஆகிவிட்டது, ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே அவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ஆக்சன் தூக்கலாகவும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது, கபாலி, காலா, தர்பார், ஜெயிலர், வேட்டையன், கூலி எல்லா படங்களிலுமே அதிக வன்முறை காட்சிகள் இருந்தது,
தொடர்ந்து இப்படிப்பட்ட படங்களில் நடிப்பது பற்றி ரஜினி யோசித்த மாதிரி தெரியவில்லை. ஏனெனில் அவருக்கு தேவை வெற்றி. தொடர் வெற்றி. ‘விஜய் ரஜினியை தாண்டி சென்று விட்டார்.. அவர்தான் சூப்பர் ஸ்டார்’ என சிலர் பேசியது ரஜினியின் ஈகோவை அதிகமாக சீண்டியது. எனவே அவரை தாண்டி செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்ற இளைஞர்களுடன் கை கோர்த்து ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்கினார்,

அதன் விளைவுதான் இப்படிப்பட்ட படங்கள் வெளிவந்தது. தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்திலும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. தனது மகனை இழந்த முத்துவேல் பாண்டி கேங்ஸ்டருக்கு எதிராக களமிறங்குவதுதான் ஜெயிலர் 2 படத்தின் கதை . அதிக வன்முறை காட்சிகள் காரணமாக படத்திற்கு சென்சாரில் 'A' சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டால் என்ன செய்வது என நெல்சன் யோசித்த போது ‘அதை பற்றி நீங்கள் யோசிக்காதீர்கள்.. கதையில் எந்த காம்ப்ரமைசும் பண்ணிக் கொள்ளாதீர்கள்’ என சொல்லியிருக்கிறார் ரஜினி,
ஏற்கனவே கூலி படத்திற்கு சென்சார் ‘A’ சர்ட்டிபிகேட் கொடுத்தது. இதனால் பலரும் குடும்பத்துடன் சென்று படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியாவிலும் சரி,, வெளிநாடுகளும் சரி.. இந்த காரணத்தால் வசூல் கடுமையாக பாதித்தது.தற்போது ஜெயிலர் 2-வுக்கும் ‘A’ சான்றிதழ் கிடைத்தால் கூலி சந்தித்தே அதே பிரச்சினையை ஜெயிலர் 2-வும் சந்திக்கும். ஆனால் ரஜினி அதை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
அதேநேரம் ஆக்ஷன் படங்கள் போதும் என நினைத்த ரஜினி இதிலிருந்து மீளவே சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்து நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இது ஜாலியான, குடும்ப படமாக இருக்கும் என நம்பலாம்.
