ரஜினிகாந்த் குரலுக்கு என்ன ஆச்சு!.. பஞ்ச் டயலாக் எல்லாம் பஞ்சராகிடுச்சே!.. வேட்டையன் வேலைக்கு ஆகுமா?
லைகா நிறுவனத்தை ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமாவது காப்பாற்றும் என எதிர்பார்த்த நிலையில், வேட்டையன் படத்தையே காப்பாற்ற ஆண்டவனால் தான் முடியும் என்கிற நிலையில் தான் படத்தின் டிரெய்லர் உள்ளது.
ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே. ஞானவேல் அவர் ஸ்டைலில் வேட்டையன் படத்தை செய்திருக்கிறாரா? அல்லது ரஜினிகாந்தின் தலையிடல் காரணமாக கதை மாறியுள்ளதா என்கிற சந்தேகம் டிரெய்லர் வெளியானதற்கு பிறகு ஹெவியாக அடிக்கிறது.
லைகா நிறுவனம் வேட்டையன் படத்தை ரொம்பவே நம்பியுள்ள படத்தின் சீனை பார்த்தால் அதிகமாக பொருட்செலவே செய்யாமல் ரஜினிகாந்த் பெயரை வைத்து பல்வேறு ஊர்களில் இருந்து முன்னணி நட்சத்திரங்களை அடுக்கி படத்தை எடுத்திருப்பது போலத்தான் தெரிகிறது.
வேட்டையன் டீசரில் அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்திருந்தது ரசிகர்களை செம டென்ஷன் ஆக்கியிருந்தது. ஆனால், ஏஐ மூலமாக பிரகாஷ் ராஜின் குரலை அப்படியே அமிதாப் பச்சன் குரலாக மேட்ச் செய்து விட்டனர்.
ஆனால், டிரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் வாய்ஸ் என்ன டல் அடிக்குது என்கிற கேள்விகள் தான் எழுந்துள்ளன. பஞ்ச் டயலாக் வசனங்களை எப்போதுமே செம பவராக கியாரே செட்டிங்கா என பேசக்கூடிய ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் அவரது வாய்ஸில் வித்தியாசம் நிறையவே தெரிகிறது என்றும் அவருக்கும் ஏஐ டப்பிங் செய்து விட்டார்களா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
வரும் அக்டோபர்10ம் தேதி வெளியாகவுள்ள ரஜினிகாந்தின் வேட்டையன் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறுமா? அல்லது விஜய்யின் கோட் படத்தை போல சொதப்பி விடுமா? என்கிற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
படம் முழுக்கவே என்கவுன்ட்டரை செய்பவர்கள் தான் போலீஸ் என்கிற ரேஞ்சில் வசனங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஜெய்பீம் படத்தில் கஸ்டடி டெத்தை காட்டிய ஞானவேல் இயக்கத்திலா இப்படியொரு படம் உருவாகியுள்ளது என்றும் கேட்டு வருகின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டையே ரஜினிகாந்த் ஆதரித்து பேசிய நிலையில், அவரை வைத்து ஞானவேல் என்ன செய்திருக்கப் போகிறார் என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.