பாட்ஷா வசனம் சொல்லி வாழ்த்து சொன்ன ரஜினி!.. யாரை சொல்றாருன்னு தெரியலயே!...
Rajinikanth: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகமே கவனிக்கும் ஒரு நடிகராக இருப்பவர் ரஜினி. திரையுலகமே இவரை தலைவர் என அழைக்கிறது. 40 வருடங்களுக்கும் மேல் சூப்பர்ஸ்டார் பட்டத்தை கையில் வைத்திருக்கிறார். ஜெயிலர் படம் ஹிட் அடிக்கவே சுறுசுறுப்பாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்தார். இதில் அவருக்கு கவுரவ வேடம் என்றாலும் நிறைய காட்சிகள் இருந்தது. ஆனாலும் படம் ஓடவில்லை. அதன்பின் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருந்தார்.
அதோடு, ஒரு தவறான என் கவுண்ட்டர் செய்துவிட்டு வருத்தப்படும் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷின் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.
அந்தவகையில் கூலி படமும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த படம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என கணிக்கப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இந்நிலையில்தான் ரஜினி தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
வழக்கமாக ‘எல்லோரும் மன நிம்மதியுடனும், சந்தோஷமாகவும் என்கிற ரீதியில்தான் ரஜினி வாழ்த்து சொல்வார். ஆனால், இந்த முறை பாஷா படத்தில் அவர் பேசியுள்ள ‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்... கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டு விடுவான்... புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
யாரையாவது மனதில் வைத்து இதை சொல்லி இருக்கிறாரா இல்லை தனது ரசிகர்களுக்கு பிடிக்கும் என சொல்லி இருக்கிறாரா தெரியவில்லை என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.