D55: அமரனுக்கு பின் மீண்டும் ஒரு ரியல் ஸ்டோரி!.. தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி பட அப்டேட்!...
Dhanush: தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என பழ மொழிகளிலும் நடித்து முக்கிய நடிகராக மாறி இருப்பவர் நடிகர் தனுஷ். ஒரு பக்கம் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் திரைப்படங்களை இயக்கியும் வருகிறார். தனுஷ் இயக்கி நடித்து வெளியான இட்லி கடை திரைப்படம் மெகா ஹிட் அடிக்க வில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இப்படம் விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. தற்போது போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடித்து நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் டியூட் படத்தில் கலக்கிய மமிதாக பைஜூ கதாநாயகியக நடித்து வருகிறார்.
இது தனுஷின் 54வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு பின் தனுஷின் 55வது திரைப்படத்தை அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூஜ ஹெக்ட்டே நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்த தனுஷ் இந்த படத்தில் பூஜா ஹெக்டேடன் ஜோடி சேரவிருக்கிறார்.
அமரனை போலவே இந்த படத்திலும் ராஜ்குமார் பெரியசாமி ஒரு உண்மையை கதையை கையில் எடுத்திருக்கிறாராம். இந்த சமுதாயத்திற்கு முக்கியமானவர்களாக இருந்தாலும் மக்களால் கவனிக்கப்படாத, மதிக்கப்படாத மனிதர்களை பற்றி இந்த படம் பேசுகிறதாம். தனுஷ் இப்போது நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் இந்த படத்தின் வேலைகள் துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார்.
