ரஜினி ரசிகர்கள் செய்த காக்கா வேலை.. விரைவில் விஜய் சூப்பர்ஸ்டாரை சந்திக்க வாய்ப்பு!
உலகம் முழுவதும் நேற்று ரஜினியின் வேட்டையன் படம் வெளியானது. வசூல் ஜெயிலர், கோட் மாதிரி இல்லைன்னு சொன்னாங்க. ஆனா படம் நல்லாருக்கு. ரசிகர்களின் அதகளம் தாங்க முடியல. இதுபற்றி பிரபல வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
ரஜினி ரசிகர்கள் ரொம்ப பக்குவமானவர்கள். அவர் புத்தர் மாதிரி போதனை பண்ணிக்கிட்டே இருக்காரு. ஆனால் இவங்க கேவலத்திலும் கேவலமாக நடந்துக்கிறாங்க. நேத்து தெர்மோகோல் காக்காவைத் தொங்க விட்டுட்டு சுடுறாங்க. அதுக்கு பட்டாசு எல்லாம் வைக்கிறாங்க. இப்படியா குழந்தைத்தனமா செய்றதுன்னு தெரியுது. ஆனா விஜய் ரசிகர்கள் குறி வச்சது போதும். குனிஞ்சி பாருன்னு சொல்றாங்க.
அப்படி ஒரு ட்ரெண்டிங் போகுது. என்னென்ன ஹேஷ்டேக் போகணும்னு வரைமுறையே இல்லை. அந்த அளவுக்கு மோசமான படம் இல்லை வேட்டையன். அழகா த.செ.ஞானவேல் சொல்லியிருக்காரு. அதிலும் முதல் பாதி விறுவிறுப்பு.
அடுத்த பாதியில் தொய்வு இருந்தாலும் அதை சரி பண்ணி திருப்தியாகக் கொடுத்துருக்காரு. தொடர்;ந்து குடும்பங்கள் கொண்டாடும். சூரியனை ஆயிரம் கைகள் மறைத்தாலும் சூரியன் மறைவதில்லைன்னு சொல்வாங்க. அப்படித் தான் விஜய் ரசிகர்கள் எவ்வளவு தான் ஹேஷ்டேக் அடிச்சாலும் அது ஹிட் படமாக மாறும் என்பதில் எந்த டபுட்டும் இல்லை.
ஆனா ஓபனிங் வசூல் விஜய் படத்தைத் தாண்டவில்லை. அதற்குக் காரணம் பப்ளிசிட்டி எதுவும் படத்துக்குப் பண்ணவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது தான். நல்லாருந்தாருன்னா பெரிய ஹைப்பைக் கிரியேட் பண்ணிருப்பாரு. முதல் நாள் வசூல் உலகம் முழுவதுமே 50 கோடியைத் தாண்டறதுக்கு வாய்ப்பில்லைன்னு சொல்றாங்க.
இயற்கையாகவே அப்படி ஒரு சூழல் உருவாகிடுச்சு. ஆனா படம் நல்லாருக்குங்கற டாக் வந்துருக்கு. போகப் போகப் பிக்கப் ஆகறதுக்கு வாய்ப்பு இருக்கு. விஜய் ஏன் படம் பார்த்தாருன்னா, அவர் அரசியலுக்கு வந்துட்டாரு. அதனால ரஜினி ரசிகர்களும் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதற்குத் தான் போனதா சொல்றாங்க. முதல் நாளே விஜய் பார்த்துருந்து இருக்கலாம். இப்போ ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு எல்லாம் வாழ்த்து சொல்லியிருக்காரு.
தேர்தல் வருவதற்குள் ரஜினி ரசிகர்களைக் கன்வின்ஸ் பண்றதாகத் தான் விஜயோட பிளானா இருக்கும். விரைவில் அவர் ரஜினியை சந்திக்கப் போவதாக ஒரு தகவல் வருது. ரஜினியின் உடல் நிலை குறித்து விசாரிக்கலாம். அல்லது அவரது மாநாட்டுக்கு ஆசி கேட்கப் போகலாம். ஆனால் இந்த சந்திப்பு நிச்சயம் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.