ரஜினியின் உடல்நிலை!.. லோகேஷ் பிளான் என்ன?!.. தள்ளிப்போகுமா கூலி படத்தின் ஷூட்டிங்?!..
உடல்நலக்குறைவால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது கூலி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் நிலை என்ன என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
த.செ.ஞானவேல் ராஜாவின் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் வேட்டையன். படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான மனசிலாயோ பாடலையும், படத்தின் டீசரையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது திரைத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேட்டையன் படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களையும், படக்குழுவினரையும், திரைத்துறையினரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேட்டையன் படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் இணைந்த ரஜினி முக்கிய காட்சிகளில் நடித்து வந்துள்ளார். மருத்துவமனையில் ரஜினியை அனுமதிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு படப்பிடிப்புக்காக ஆலோசனை நடத்துகிறார்கள் என்றால் சூட்டிங் நடக்கும் நேரம், இடம், எந்த தேதியில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற முழு விவரமும் சரியாகத் திட்டமிடப்பட்டு விடும்.
உதாரணமாக 45 நாள்களுக்கு ஒரு படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்றால் எல்லாம் சரியாக திட்டமிடப்பட்டு இருக்கும். அதில் 1 நாள் தவறினாலும் அடுத்த நாளுக்காகப் போட்ட திட்டம் பாதிக்கப்படும்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இந்த மாதம் அக்டோபர் 17ம் தேதி முதல் நடிப்பதாக இருந்ததாம். அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனதால் வரமுடியாத சூழல் உருவாகி விட்டது.
லோகேஷ் கனகராஜூம் கூலி படத்தை ஏப்ரலுக்குள் முடித்து விட்டு அடுத்து கைதி 2 படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டு இருந்தாராம். கைதி 2 படத்தில் சூர்யாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜெயிலர் 2 படத்தின் வேலைகளும் தள்ளிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப் பார்க்கும்போது ரஜினியின் கூலி படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்திற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 2ம் பாகமும் தயாராக உள்ளது. எது எப்படி இருந்தாலும் ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய பின்னரே அடுத்து படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்வார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என திரைத்துறை வட்டாரத்தினர் தெரிவித்து வருகின்றனர்.