10 நாளாகவே ரஜினிக்கு இருந்த பிரச்சனை... இன்று நடந்த சிகிச்சை இதுதான்..!

73வயதான ரஜினி தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்காக 'யுஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய தகவல்கள் தற்போது பரபரப்பாகி வருகின்றன. ரஜினிக்கு அடிவயிற்று வலி என்றும் அங்குள்ள ரத்தநாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிறிய அளவில் சர்ஜரி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினி செரிமானப்பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவு சென்றார்.


அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட உள்ளது. இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் இசிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகள் செய்யப் பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தேவைப்படும்பட்சத்தில் ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

உடல் பரிசோதனைக்குப் பிறகு ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாம். சீரற்ற ரத்த ஓட்டம், செரிமான பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு கடந்த 10 நாள்களாகவே சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்படி இன்று அதிகாலை இந்த சிகிச்சை நடந்துள்ளது.

சிறுநீரகத்துக்கு செல்லும் பாதையில் சதை வளர்ந்துள்ளதாகவும் அதற்காக அந்தப் பகுதியில் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அங்கு ஸ்டென்ட் வைத்துள்ளார்கள் என்றும் தெரிகிறது. ரஜினியின் தொடைப்பகுதியில் இருந்து நரம்பு வழியாக மருத்துவர்கள் இந்த ஸ்டென்டை செலுத்தியுள்ளார்கள் என்றும் தெரிகிறது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து 3 அல்லது 4 நாள்களில் ரஜினி வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it