படுத்துக்கிடந்த இந்தியன் 3ஐத் தூக்கி விட்ட ரஜினி...! 77ல் விட்டுக் கொடுத்த கமலை மறப்பாரா?

by SANKARAN |
indian 3, rajni
X

கமல் வரும் 25ம் தேதி திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்பியாக பதவி ஏற்க உள்ளார். இதற்காக தன் நண்பர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். வேள்பாரி விழாவில் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கரைப் புகழ்ந்து பேசினார். இந்தியன் 3 ஐ எடுப்பதற்காக ரஜினியே உள்ளே இறங்கி சுபாஷ்கரனிடம் பேசி உள்ளார். இந்தப் படத்துக்காக கமலும், ஷங்கரும் சம்பளம் வாங்கப்போறது இல்லையாம். ரஜினிகாந்த் இந்தியன் 3க்காக பேசி சுமூகமான தீர்வைத் தந்துள்ளார் என்றும் அதற்கு நன்றி சொல்வதற்குத் தான் கமல் தற்போது அவரை சந்தித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். ஒருவேளை இந்தியன் 3ல் கேமியோ ரோலில் ரஜினி நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.


ரஜினியும் கமலும் 80களில் திரையுலகில் கோலோச்சிக் கொண்டு இருந்தனர். அவரது ரசிகர்களுக்குள் கடும் போட்டி இருந்தது. இருவரின் படங்களுக்கும் ஆரோக்கியமான போட்டி இருந்ததே தவிர பொறாமை கிடையாது. அதே நேரம் கமலும், ரஜினியும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். பஞ்சு அருணாசலம் ஒரு அருமையான கதையை எழுதினார்.

அதில் ரஜினி, சிவக்குமாரை நடிக்க வைக்கலாம் என திட்டம் போட்டார். படத்தில் சம்பத் என்பது தியாகி கேரக்டர். அதில் ரஜினி நடிப்பதாக இருந்தது. இன்னொரு கேரக்டர் நாகராஜ். முதலில் நாகராஜ் கேரக்டரில் ரஜினியும், சம்பத் கேரக்டரில் சிவக்குமாரும் நடிப்பதாக இருந்தது. படத்தின் இயக்குனர் எஸ்பி.முத்துராமன். திடீர்னு பஞ்சு அருணாசலத்துக்கு ஒரு யோசனை வருது.

ஆர்டரைத் திருப்பிப் போட்டா என்னன்னு நினைச்சிட்டாரு. ரஜினிக்கு சம்பத் கேரக்டரிலும், நாகராஜ் சிவக்குமார் கேரக்டரிலும் நடிக்க வைப்பதுன்னு முடிவு செய்தார். அவர்களிடம் போய் விவரம் சொன்னார். இது சரியா வருமான்னு சிவக்குமார் கேட்டார். அதற்கு பெரிய கதாசிரியர் பஞ்சு அருணாசலம் விளக்கம் சொன்னதும் சம்மதிக்கிறார்.


அதே போல ரஜினியும் முதலில் தயங்கி பின் சம்மதிக்கிறார். படத்தில் நீளமான வசனத்தை ரஜினிக்குப் படித்துக் காட்டியதும் ஒன்றும் பேசாமல் செட்டை விட்டு வெளியே போய்விட்டாராம். அதன்பிறகு ரஜினி ஏவிஎம் வாசலில் வைக்கப்பட்டுள்ள ஏவிஎம் லோகோவில் உள்ள முயற்சி திருவினையாக்கும் என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு மீண்டும் செட்டுக்கு வருகிறார்.

அங்கு இது நான் நடிக்க வேண்டிய கேரக்டர் இல்லை. கமல் நடிக்க வேண்டியதுன்னு சொல்கிறார். அதற்கு எஸ்.பி.முத்துராமனும், பஞ்சு அருணாசலமும் கமல் இதுமாதிரி நிறைய நடிச்சிட்டாரு. இதுல நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு சொல்லி ஆர்வத்தை உண்டாக்கினர். நீண்ட டயலாக்கை உங்களால் எவ்வளவு பேச முடியுமோ பேசுங்க. அப்புறம் கட் பண்ணி சேர்த்துக்கலாம்னு சொன்னதும் அவர் சம்மதித்தார். அதுதான் புவனா ஒரு கேள்விக்குறி. சுமித்ராவின் நடிப்பும் அட்டகாசம்தான்.

படம் சக்கை போடு போட்டது. அந்த வகையில் ரஜினிக்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த படம்னா அது இதுதான். அன்று முதல் பஞ்சு அருணாசலம் எப்போ கூப்பிட்டாலும் உடனே வீடு தேடி போவார் ரஜினி. அதே போல ஆண்டுதோறும் தீபாவளிக்கு முதல் நாள் எஸ்பி.முத்துராமனைத் தேடி வேட்டி சேலை பழம் எல்லாம் கொடுத்து அவரிடம் ஆசி வாங்கி வருவார்.

ஆனால் இந்தப் படம் முதலில் மகரிஷி எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. முதலில் கமலுக்கு இதைச் சொல்ல அவர் ஆர்.சி.சக்தியிடம் ஓகே சொல்லவில்லை. இது படிக்கத்தான் நல்லாருக்கும். சினிமாவுக்கு செட்டாகாதுன்னு கமல் சொல்லி விட்டாராம். அதே நேரம் பஞ்சு அருணாசலமும் அதே நாவலைத் தழுவி எடுத்த படம்தான் இந்த புவனா ஒரு கேள்விக்குறி. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Next Story