1000 கோடியை ஈசியா தாண்டும் வேட்டையன்... பயில்வான் உறுதி

வேட்டையன் படம் குறித்தும், அதன் வசூல் குறித்தும் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

வேட்டையனைப் பொருத்தவரை அது ஒரு கமர்ஷியல் என்டர்டெயின்மெண்ட். அனிருத் ரெண்டு பாட்டு விட்டுருக்காரு. 'மனசிலாயோ' பாடல் அவ்ளோ பிரபலம். அதே போல ரஜினியும் அனிருத்தை என் மகனைப் போன்றவர் என்று சொல்லி இருக்கிறார்.


அதற்கு ஏத்தபடி அனிருத்தும் அவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அழகாக மெட்டு போட்டிருக்கிறார். அதனால தான் இன்னைக்கும் வேட்டையன் படத்தோட டிரைலரை எக்கச்சக்கமான பேரு பார்த்துக்கிட்டு இருக்காங்க. அரசியல் துளியும் இல்லை.

சந்தோஷப்படுத்துறதுக்குத் தான் படம். இதைத் தெளிவா சொன்னவர் ரஜினிகாந்த் மட்டும் தான். இன்னைக்கு துணிச்சலாகப் பேசக்கூடிய ஒரே நடிகர் அவர் தான். ராணா டகுபதி, பகத் பாசில்னு முக்கியமான நடிகர்கள் நடிச்சிருக்காங்க.

பகத்பாசிலுக்காக ரஜினிகாந்த் காத்திருந்தாராம். அமிதாப்பச்சனும் ரஜினிக்காக இந்தப் படத்தில் நடிச்சிருக்காரு. ஆக எல்லா தரப்பினரையும் திருப்திப்படுத்தக்கூடிய அளவில் இந்தப் படம் இருக்கு. உலகம் முழுக்க 5000 தியேட்டர்கள்ல இந்தப் படம் ரிலீஸ்னு சொல்றாங்க.

400 கோடி ரூபாய் படம் வெளியாவதற்கு முன்பே கலெக்ஷனாகி விட்டதுன்னு தயாரிப்பு நிறுவனம் பெருமைப்பட்டுக் கொள்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே 400 கோடின்னா ஈசியா 1000 கோடியைத் தாண்டும் என்பது தான் அர்த்தம் ஆகுது.

ஜெயிலரும் 800 கோடி ரூபாய் வசூல் ஆச்சு. அந்த வகையில வேட்டையன் படம் அந்த வசூலை முந்தும். ஏன்னா ரஜினி படத்தை ரஜினி படம் தான் வசூலில் முறியடிக்கும். அந்த அடிப்படையில் வேட்டையன் வசூல் சாதனை புரிவது உறுதி. துபாயில் ரஜினி ரசிகர்கள் நிறைய பேர் இருக்காங்க.

அதனால அங்கு பட புரொமோஷன் விழா நடக்கிறது. இந்தப் படத்தில் என்கவுண்டரை வித்தியாசமான முறையில் இயக்குனர் த.செ.ஞானவேல் எடுத்துள்ளாராம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it