விஜய் டூ ரஜினி... இயக்குனர்கள் லிஸ்ட்ல அவரும் சேர்ந்துருவாரு போல..!

by SANKARAN |
rajni, vijay
X

ரஜினியின் அடுத்த பட இயக்குனர்கள் லிஸ்ட்டைப் பார்த்தால் அதுவும் விஜய் படத்தை இயக்கியவராகத் தான் இருக்கும் என்று தெரிகிறது. சமீபகாலமாக

விஜயை வைத்து படம் எடுத்த எல்லா இயக்குனர்களும் ரஜினியை வைத்தும் படம் இயக்குறாங்க. லோகேஷ்கனகராஜ், நெல்சன் திலீப்குமார் இவர்கள் எல்லாம் விஜயை வைத்துப் படம் இயக்கியவர்கள். லோகேஷ்கனகராஜ் மாஸ்டர் படத்தையும், நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தையும் விஜயை வைத்து இயக்கினார்.

அதே போல ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இப்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். நெல்சன் திலீப்குமார் ஜெய்லர், ஜெய்லர் 2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இப்போது ஹெச்.வினோத் விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்த இடத்தில் ரஜினியின் இயக்குனர் அவராகத் தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதை நோக்கி ஒரு பேச்சு அடிபடுகிறது. ஹெச்.வினோத் கொடைக்கானல் சூட்டிங் ஜனநாயகன் படத்திற்காக இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன்னாடி ஹெச்.வினோத் ரஜினியை சந்தித்துள்ளார்.

அப்போது கதையில் ஒன்லைனை சொல்லி இருக்கிறார். அது ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் ரொம்பவே பிடித்துப் போனதாம். அவருக்குப் பிடித்தால் எல்லாருக்கும் பிடித்தமாதிரிதான். ஐசரி கணேஷ் தயாரிக்கிற படமாம்.


அதே போல வீரதீர சூரன் படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரும் ரஜினியை சந்தித்து ஒரு ஒன்லைனை சொன்னாராம். அதுவும் ஐசரி கணேஷூக்காகத் தான் சொன்னாராம். அந்தவகையில இந்த ரெண்டு இயக்குனர்களில் ரஜினி யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது இனிதான் தெரியுமாம்.

தற்போது இளம் இயக்குனர்களுடன் ரஜினி கைகோர்த்து வருவது ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மேலே சொன்ன அத்தனை இயக்குனர்களுமே திறமை வாய்ந்தவர்கள்தான். அவர்கள் கொடுத்துள்ள வெற்றிப்படங்களே இதற்கு சாட்சி. அந்த வகையில் வீரதீர சூரன் படம் மட்டுமே ஆவரேஜ் ரகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இனி ரஜினி எந்தப் படத்தில் நடித்தாலும் அது ஏறுமுகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.

Next Story