திருப்பதி லட்டு பற்றி கேட்டதற்கு ரஜினி சொன்ன பதில் இதுதான்..! தலைவர் தலைவர்தான்!

இப்போதெல்லாம் சினிமா படவிழாவில் நடிகர்கள் பார்த்து பார்த்து தான் பேச வேண்டியுள்ளது. எதைப் பேசினாலும் சர்ச்சையாக்கவே ஒரு கூட்டம் வந்துவிடுகிறது. சோஷியல் மீடியாவும் வந்துவிட்டதால் அது வைரலாகி விடுகிறது. அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் விதிவிலக்கல்ல.

ஜெயிலர் படவிழாவில் காக்கா, கழுகு கதை சொன்னார். பெரிய சர்ச்சையாக வெடித்தது. சமீபத்தில் வேட்டையன் ஆடியோ லாஞ்ச்சில் டோபி, கழுதை, துறவி கதை சொன்னார். அதுவும் விவாதப் பொருளானது. அந்த வகையில் மிக நீண்ட நேரம் பேசியது இதுதான் என்கிறார்கள். 55 நிமிடம் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எந்த இடத்திலும் ரசிகர்களை சோர்ந்து போய் உட்கார வைக்கவில்லை.

ரஜினியின் பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்ததாகவே அனைவரும் கருத்து தெரிவித்தனர். அதே நேரம் ரஜினியும் பக்குவமாகவே பல விஷயங்களை எடுத்துச் சொன்னது அருமை என அனைவருமே பாராட்டும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று ரஜினியிடம் லட்டு குறித்து ஒரு கேள்வி எழுப்பினர். அதற்கு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.


சமீபத்தில் மெய்யழகன் படவிழாவில் நடிகர் கார்த்தி திருப்பதி லட்டு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி விட்டார். அப்புறம் பவன் கல்யாண் அது குறித்து லட்டுல எல்லாமா காமெடி பண்ணவாங்கன்னு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து நான் பேசியது தவறான புரிதலை ஏற்படுத்தி விட்டது என்று குறிப்பிட்ட கார்த்தி அதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார். இது வைரலானது.

வேறு ஒன்றும் அதில் பெரிய விஷயமே இல்லை. லட்டு வேணுமான்னு தான் ஆங்கர் கேட்டாங்க. அதுக்கு அவர் வேணாம். லட்டு பற்றி இப்போ பேச வேண்டாம். அது சென்சிட்டிவ்வான விஷயம்னு தான் சொன்னார்.

லட்டு குறித்து பேசிய கார்த்தியைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் ஸ்கெட்ச் போட நிருபர் ஒருவர் முயன்றுள்ளார். அதற்கு ரஜினி நம்மகிட்டேவா என்பது போல நெத்தி அடியாய் பதில் சொல்ல வேறு வழியில்லாமல் போய்விட்டார் அந்த நிருபர்.

சூப்பர்ஸ்டார் பிளாக் டீசர்ட், கூலிங் கிளாஸ்ல வருகிறார். பார்ப்பதற்கு ஸ்மார்ட் லுக்கோடு இருக்கிறார். காரில் ஏறுவதற்காக வந்து கொண்டு இருக்கிறார். ரஜினியை நிருபர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்களில் ஒருவர் நீங்க பெரிய ஆன்மிகவாதி. திருப்பதி லட்டு விஷயமா உங்களோட கருத்து என்னன்னு கேட்குறார்.

அதற்கு சாரி. நோ கமெண்ட்ஸ் என்று சொல்லி விட்டு அவருக்கே உரித்தான சிரிப்பை சிரிக்கிறார். அந்த சிரிப்பின் அர்த்தம் நம்மகிட்டே வா என்பது போல இருக்கு. அப்புறம் வேட்டையன் பட ஆடியோ லாஞ்ச் சூப்பர் தலைவான்னு சொல்றாங்க. தேங்க் யு தேங்க் யுன்னு சொல்கிறார்.

காரில் ஏறி உட்கார்ந்ததும் பலரும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குகின்றனர். அதில் ஒரு சிறுவனும் வாங்குகிறான். அவனுக்கு ரஜினியுடன் செல்பி எடுக்க ஆசை. அதைப் புரிந்து கொண்ட ரஜினி அவனை மீண்டும் வரவழைத்து செல்பி எடுக்க வைக்கிறார்.

கமெண்ட்ஸைப் பார்த்தால் தலைவர் தலைவர் தான். அந்தப் பையனை திரும்ப அழைத்தது தான் சூப்பர்ஸ்டார் என்கின்றனர். இன்னொருவர் ரஜினி சார் மைண்ட் வாய்ஸ் இதுதான். லட்டுக்கெல்லாம் அக்கப்போறா... லட்டுலயுமா அரசியல் பண்ணுவீங்கன்னு கேட்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles
Next Story
Share it