ரஜினி, அஜித் ரெண்டு பேரோட அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி... டைரக்டர் யாரு..?

தமிழ்த்திரை உலகில் தற்போது விஜய் தனது கடைசி படமாக ஜனநாயகன் என்பதை அறிவித்துள்ளதால் அங்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை பிடிக்கப்போவது யார் என்று பல்வேறு கேள்விகள் வருகின்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கையில் தான் விஜய் துப்பாக்கியைக் கொடுத்தார்.
அதனால் அவர்தான் அந்த இடத்தைப் பிடிப்பார் என்கிறார்கள். இது இப்படி இருக்க இப்போது ரஜினி, அஜித் படங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ரெண்டு பேருக்குமே தயாரிப்பாளர்கள் நான் நீ என்று போட்டி போடுகிறார்களாம். என்ன விவரம்னு பார்க்கலாமா...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நித்திலன் சுவாமிநாதனுடன் இணைந்து அடுத்து படம் பண்ணப் போறதா சொல்றாங்க. இதே போல அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றியும் பல கருத்துகள் வருகின்றன. அதுபற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க 2 நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில இருக்காங்க. ஒண்ணு ஐசரி கணேஷ். இன்னொன்னு ரெட் ஜெயண்ட் நிறுவனம். இந்த ரெண்டு நிறுவனத்துக்கும் ரஜினிகாந்த் நிச்சயமா ஒரு படம் பண்ணப் போறாரு. அதுல எந்த சந்தேகமும் இல்லை. இந்த ரெண்டு தயாரிப்புல எதுக்கு முதல்ல நடிக்கிறாருன்னு தெரியல. அதை முடிவு பண்ணினதுக்கு அப்புறம் தான் டைரக்டர் யாருன்னு முடிவு பண்ணுவாங்க. அதுக்கு அப்புறம்தான் இதைப் பற்றிய அறிவிப்புகள் எல்லாம் வரும்.

அஜித்தோட அடுத்த படத்துக்கு ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குனர்னு முடிவு ஆகிடுச்சு. ஆனா தயாரிக்க 2 நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கிட்டு இருக்காங்க. யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போகுதுன்னு தெரியல. ஆதிக் ரவிச்சந்திரனைத் தொடர்ந்து அஜித் நடிக்கப் போற அடுத்த படத்துக்கு கார்த்திக் சுப்புராஜ் தான் டைரக்டர். இது ரசிகர்களால் எதிர்பார்க்கக்கூடிய ப்ரஷ்ஷான காம்பினேஷன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.