இது பிரஸ்மீட் இல்லை வெற்றி விழா!.. பத்திரிகையாளரிடம் வாக்குவாதம் செய்த மிர்ச்சி சிவா.. ஏன் திடீர்னு?

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரயான் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான பறந்து போ படத்தை சேலத்தில் ப்ரோமோட் செய்ய மிர்ச்சி சிவா மற்றும் ராம் சென்றிருந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஒரு பத்திரிகையாளர் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாகவும், நடிகர்களின் சம்பளம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பிய நிலையில், மிர்ச்சி சிவா மற்றும் ராம் இருவருமே ரொம்பவே டென்ஷனாகி விட்டனர்.
படத்தை பற்றி மட்டும் கேள்விக் கேளுங்கள் என்றும் தேவையற்ற கேள்விகளை கேட்கக் கூடாது என்றும் மிர்ச்சி சிவா கட் அண்ட ரைட்டாக சொல்லிவிட்டார். ஆனால், தொடர்ந்து அந்த பத்திரிகையாளர் வாக்குவாதம் செய்த நிலையில், இது ஒன்றும் பிரஸ்மீட் இல்லை என்றும் இது படத்தின் வெற்றி விழா, உங்களை யாரு இங்கே கூப்பிட்டா என பத்திரிகையாளரை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ செய்து விட்டார்.

நடிகர்களின் சம்பளங்கள் குறித்து நாங்கள் எப்படி கருத்து சொல்வது என்றும் போதைப் பொருள் பயன்படுத்துவது தவறான விஷயம் தான். ஆனால், இங்கே நாங்க எங்க படத்தை பற்றி பேச வந்திருக்கும் இடத்தில் சம்பந்தமில்லாத கேள்விகளை ஏன் கேட்குறீங்க, எல்லா துறையிலும் சிக்கல் இருக்கத்தானே செய்கிறது என ராம் பேசி அவரும் டென்ஷனாகி விட்டார்.
பறந்து போ திரைப்படம் இதுவரை 1.5 கோடி ரூபாய் வசூலை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் பெரிதாக இல்லை என்றே சொல்கின்றனர். இந்த வாரம் வெளியான அனைத்து படங்களுக்கும் இதுதான் நிலைமை.