நான் கஞ்சனா யார் சொன்னா? அதுக்கெல்லாம் கவலைப்படுற ஆளு நான் இல்ல... குமுறும் ராமராஜன் பட நடிகர்

by Sankaran |   ( Updated:2024-12-06 16:53:36  )
நான் கஞ்சனா யார் சொன்னா? அதுக்கெல்லாம் கவலைப்படுற ஆளு நான் இல்ல... குமுறும் ராமராஜன் பட நடிகர்
X

ராமராஜன் கடைசியாக நடித்த படம் சாமானியன். அதுல முக்கிய வேடத்தில் நடித்தவர் எம்.எஸ்.பாஸ்கர். ஆர்.ராகேஷ் இயக்கத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்எஸ்.பாஸ்கர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார், போஸ் வெங்கட், மைம் கோபி உள்பட பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் ராமராஜனுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்தது. ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் மூக்கையா என்ற கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் அருமையாக நடித்துள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் உள்ளார். 1987ல் திருமதி ஒரு வெகுமதி படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்குள் நுழைந்தார்.

மக்கள் என் பக்கம், காவலன் என் கோவலன் படங்களும் இவருக்கு அதே ஆண்டில் வெளியானது. இவர் சிறந்த குணச்சித்திர நடிகர் என்று சொல்லும் வகையில் யதார்த்தமாக நடிப்பார். இவரது இயல்பான காமெடியும், முகபாவனைகளும் இவருக்கு நடிப்பது போலவே தெரியாது.


அதுதவிர டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். 2023ல் இவர் நடித்த பார்க்கிங் படம் ரொம்பவே பேசப்பட்டது. இவர் தற்போது நான் கஞ்சன் அல்ல என்றும் நடந்தது இதுதான் என்றும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

நான் ஒரு கஞ்சன். யாருக்கும் காசு கொடுக்க மாட்டேன்னு சொல்வாங்க. ஒருத்தர் சுகர் மாத்திரை வாங்கணும்னு காசு கேட்டாரு. கொடுத்தேன். வாங்கிட்டு நேரா ஒயின் ஷாப்புக்குப் போறாரு. அப்புறாம் நான் எதுக்கு காசு கொடுக்கணும்? பசிக்கிறதா வாங்க சாப்பாடு வாங்கித் தாரேன். மாத்திரை வாங்கணுமா? மெடிக்கல்ஸ் வாங்க.

வாங்கித் தாரேன். ஸ்கூல் பீஸ் கட்டணுமா? வாங்க நானே கட்டுறேன்னு சொன்னா கையில கொடுங்கன்னு கேட்குறாங்க. நான் கையில பணம் தர மாட்டேன். இதுல என்ன தவறு இருக்கு? இதுக்காக நாலு பேரு என்னைத் திட்டுனா திட்டிட்டுப் போகட்டும். எனக்கு ஒண்ணும் கவலை இல்லை என்கிறார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

எம்எஸ்.பாஸ்கரைப் பொருத்தவரை அவர் சொல்வதில் நியாயம் உள்ளது என்றே சொல்லலாம். அவர் சொன்னதுபோல நாமே பலருக்கும் இரக்கப்பட்டு பணத்தைக் கொடுத்து இருப்போம். ஆனால் பெரும்பாலும் அவர்களோ அதை மது அருந்துவதற்குத் தான் பயன்படுத்துகின்றனர். இது நம்மை அவர்கள் ஏமாற்றுவதற்குச் சமம். நாம் அவர்களின் பசியைப் போக்க நினைக்கிறோம்.

ஆனால் அவர்களோ சாப்பாடு வாங்க மறுக்கிறார்கள். பணமாகக் கேட்கிறார்கள். அப்படி கொடுக்கும் பணம் தவறான காரியத்துக்குப் போகும்போது யாருக்குத் தான் கொடுக்க மனசு வரும்? அதனால் இந்த விஷயத்தில் எம்எஸ்.பாஸ்கர் செய்வதே சாலச்சிறந்தது.

Next Story